இமாம் ஹாதி அலைஹிஸ்ஸலாம்

அபுல்ஹஸன் அலீ அல்ஹாதி எனும் இமாம் ஹாதி அஹ்லுல்பைத் தொடரில் பத்தாவது இமாமாவார். அவர்கள் ஹிஜ்ரி 212, [1] துல் ஹஜ் மாத நடுப்பகுதியில் மதீனாவின் புரநகர்ப் பகுதியான ஸரிய்ய [2] எனுமிடத்தில் பிறந்தார்கள். அவர்களது தந்தை இமாம் ஜவாத் ஆவார்கள். தாயான அன்னை ஸமானா சிறப்பும் இறையச்சமு முள்ள பொண்மணியாக விளங்கினார். .[3]
இமாம் ஹாதியின் சிறப்புப் பெயர்களில் மிகவும் பிரபல்யமானவை அல்ஹாதி, அந்நகீ என்பவையாகும். அத்தோடு, மூன்றாம் அபுல்ஹஸன் என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.[4]
(முதலாவது அபுல்ஹஸன் மூஸா இப்னு ஜஃபர் அல்காழிம், இரண்டாவது அபுல்ஹஸன் அலீ இப்னு மூஸா அல்றிழா)
இமாம் ஹாதி ஹிஜ்ரஜ 220ல் இமாமத் ஸ்தானத்தை அடைந்து கொண்டார்கள். இது அவர்களது தந்தையின் ஷஹாதத்துக்குப் பின் இடம்பெற்றதாகும். அச்சமயத்தில் அவர்களது வயது எட்டு வருடங்கள் மட்டுமே. ஆவர்களது இமாமத் 33 வருடங்கள் நீடித்தது. ஹிஜ்ரி 245ல் தமது 41ம் வயதில் இமாம் ஹாதி ஷஹீதானார்கள். (அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)
இமாம் ஹாதியை நேரடியாகக் கண்ணுற்ற ஒரு மனிதர் இவ்வாறு கூறுகின்றார். 'அவர்கள் சராசரி உயரமுடையவர்களாகவும், சிவப்பு கலந்த வெள்ளை நிற முகமும் விசாலமான கண்களும், நீண்ட புருவங்களும் கொண்டவர்கள். எப்போதும் முகத்தில் புன்முறுவலும் மகிழ்ச்சியும் நிரம்பியவர்களாகவும் காணப்பட்டார்கள்' [5]
இமாம் சமகாலத்தில் ஏழு அப்பாசிய கலீபாக்கள் ஆட்சி செய்தனர். இமாமத்தை பெறுவதற்கு முன்னர் மஃமூனும் அவரது சகோதரர் மஃதஸிமும் ஆட்சி செய்தனர். இமாமத்தை பொறுப்பெடுத்த போது முஃதஸிமின் ஆட்சி தொடர்ந்து கொண்டிருந்தது. அவருக்குப் பின் முஃதஸிமின் புதல்வர் வாஸிக், வாஸிகின் சகோதரர் முதவக்கில், முதவக்கிலின் புதல்வர் வாஸிக், வாஸிகின் சகோதரர் முதவக்கில், முதவக்கிலின் புதல்வர் முன்தஸிர், முன்தஸிரின் சிறிய தந்தையின் புதல்வர் முஸ்தயீன், முதவக்கிலின் இறுதிப் புதல்வர் முஃதஸ் ஆகியோர் ஒருவர் பின்னொருவராக ஆட்சியில் அமர்ந்திருந்தனர். முஃதஸ்ஸின் ஆட்சிக் காலத்திலேயே இமாம் ஹாதி ஷஹீதாக்கப்பட்டார்கள். [6]
முதவக்கிலுடைய ஆட்சியின் போது, அவருடைய கொடுமையான கட்டளையின் மூலம், அப்பாசிய ஆட்சியின் கேந்திர நிலையமாக விளங்கிய சாமர்ராவுக்கு கொண்டு வரப்பட்ட இமாம் ஹாதி, தமது ஆயுளின் இறுதிப் பகுதியை அங்கேயே கழித்தார்கள். [7]
இமாம் ஹாதியின் பிள்ளைகள் பதினோராவது இமாமான ஹஸன் அஸ்கரீ, ஹுஸைன், முஹம்மத், ஜஃபர், மற்றும் அலீய்யா எனும் மகள்..[8]
கலீபாக்களின் போக்கு
அநீதியான ஆட்சியாளர்களுக்கெதிராக அஹ்லுல்பைத்தினர் மேற்கொண்ட புரட்சிகளும் நடவடிக்கைகளும் இஸ்லாமிய வரலாற்றில் கண்ணியம், மகத்துவம் என்பவற்றால் நிரப்பப்பட்ட செழிப்பான பக்கங்களாகக் கருதப்படுகின்றன. அஹ்லுல்பைத் இமாம்கள், தமது அநீதிக்கெதிரான சீர்திருத்த நடவடிக்கைகள், உண்மையையும் நீதியையும் பாதுகாப்பதற்கான வீரப் பிரயத்தனங்கள் என்பவற்றின் மூலமாக இழிவான ஆட்சியாளர்களினதும் அவர்களது அநீதியான அடிவருடிகளினதும் கோபத்துக்குள்ளானவர்களாகவே என்றும் இருந்து வந்தனர். இந்த இமாம்கள், மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்கும், உண்மையைத் தெளிவுபடுத்துவதற்கும், அநீதியிழைக்கப் பட்டோரைப் பாதுகாப்பதற்கும் குழப்பம் மோசடி என்பவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும் தமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை அந்த அநியாயக்கார கலீபாக்கள் அறிந்து வைத்திருந்தனர் நேர்மை, நேர்வழி என்பவற்றுக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் புனித இமாம்களின் செயற்பாடுகள் தமது ஆட்சியை ஆட்டங்காணச் செய்யும் அபாயத்தை உணர்ந்திருந்தனர்.
மோசடி மிக்க உமையா கலீபாக்களின் இடத்தை வஞ்சத்தாலும் இஸ்லாமிய கிலாபத் என்ற பெயரில் ஏமாற்றியும் பிடித்துக் கொண்ட அப்பாசியர் ஆட்சியைத் தொடர்ந்தனர். தமக்கு முன்னிருந்த அடக்குமுறையாளர்களைப் போன்ற அஹ்லுல்பைத்தினரை அழிப்பதிலும் அவர்களது சீர்திருத்த செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்துவதிலும் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை முஸ்லிம்களுடைய தலைமைத்துவத்தின் புனிதத்தை மாசுபடுத்துவதற்கும், அதன் அந்தஸ்தைக் குறைக்கவும் தம்மிடமுள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தினார். அந்த சங்கையான இமாம்களை மக்களிடமிருந்து மக்களிடமிருந்து தூரப்படுத்தவும் அவர்கள் மீதுள்ள நேசத்தைக் களைந்து விடவும் பல்வேறு தந்திரங்களை மேற்கொண்டார்கள்.
இந்நோக்கத்தையும் தனது ஏனைய சதித்திட்டங்களையும் அடைந்து கொள்வதற்காக தந்திரத்தை மேற்கொண்ட அப்பாசிய கலீபா மஃமூனைப் பற்றி ஏற்கனவே கூறினோம் தனது ஆட்சியை சட்டபூர்வமானது என நியாயப்படுத்திக் கொள்ளவும் அதன் மூலம், இமாமத்தின் ஒளியை அணைத்து விடவும் முனைந்தனர். இது இமாம்களுடையவும், கலீபாக்களுடையவும் வரலாற்றை ஆயும் அனைவரும் அறிந்துள்ள பகிரங்க உண்மையாகும்..
மஃமூனைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த முஃதஸிம், அஹ்லுல்பைத்தினரதும் இமாம்களதும் விடயத்தில் தனது முன்னோர்கள் நடந்து கொண்ட அதே வழிமுறைகளையே கடைப்பிடித்தார். இதன் ஒரு கட்டமாகவே, இமாம் ஜவாத் அலைஹிஸ் ஸலாம் மதீனாவிலிருந்து பக்தாதுக்கு நிர்ப்பந்தமாக அழைத்து வரப்பட்டார். தனது கடினமான அவதானிப்பின் கீழேயே அவர்களை வைத்திருந்ததோடு அவர்களைக் கொலை செய்யவும் பின்னிற்கவில்லை. தவிரவும், அப்பாசியரின் உத்தியோகபூர்வ ஆடையான கறுப்பு ஆடை அணியவில்லை என்ற குற்றச் சாடம்டின் பேரில் அலவியாக்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்கள் மரணிக்கும் வரை, அல்லது கொலை செய்யப்படும் வரை அந்த சிறையினுள்ளேயே சித்திரவதைகளை அனுபவித்தனர்..[9]
முஃதஸிம், சாமர்ரா நகரில் ஹிஜ்ரி 227ல் மரணமடைந்தார்[10] அவருக்குப் பின் ஆட்சிபீடமேறிய அவரது மகன் வாஸிக், தனது தந்தை முஃதஸிமுடையவும் தனது சிறிய தந்தை மஃமூனுடையவும் அடிச்சுவட்டை பின்பற்றி ஆட்சி நடாத்தினார்.
வாஸிக், மதுபானம் அருந்துவதிலும் கேளிக்கைகளிலும் மிக்க ஈடுபாடுடையவராக இருந்தார். தன் சுவையுணர்வை அதிகரிக்கவென பல வகையான மருந்து வகைகளை உட்கொண்டார். அதற்கென பெருந்தொகையான பணத்தை செலவு செய்தார். இறுதியில், ஹி 232ல் சாமர்ராவில் மரணமெய்திய வாஸிகின் மரணத்துக்கு இந்த மதுபானமே காரணமாக இருந்தது..[11]
அலவீக்களுடனான வாஸிகின் போக்கு இருக்கமானதாக இருக்கவில்லை. அதன்காரணமாக அவருடய காலத்தில் அலவீக்களும் அபூதாலிபின் பரம்பரையினரும் சாமர்ரா பகுதியில் குடியேறி ஓரளவு செழிப்புடன் வாழ்ந்தனர் எனினும் முதவக்கிலின் ஆட்சியில் மீண்டும் சிதறடிக்கப்பட்டனர்.[12]
வாஸிக் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதவக்கில், அப்பாசிய கலீபாக்கள் அனைவரிலும் மிகவும் கடினமானவராகவும் காணப்பட்டார். இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் ஏனைய கலீபாக்களை விட முதவக்கிலுடைய ஆட்சியையே கூடுதலாக சந்தித்தார்.. பதினான்கு ஆண்டுகள் வரை இக்காலப்பகுதி நீண்டிருந்தது.
இந்த நீண்ட காலப்பகுதி இமாமுக்கும் அவர்களைப் பின்பற்றியவர்களுக்கும் இன்னல் நிறைந்த வருடங்களாகும்.
முதவக்கில் ஏனைய அப்பாசிய கலீபாக்களைவிட மிக மார்க்க விரோத செயல்களில் ஈடுபட்டார். இழி குணங்கள் கொண்டிரந்தார் இருந்ததனால் அவரது உள்ளம் முழுவதும் ஹஸ்ரத் அலீ மற்றும் அவர்களது அஹ்லுல்பைத்தினர், தோழர்கள் மீதான பொறாமையும் துவேசமும் பகையும் நிரம்பியிருந்தது. இதனால், முதவக்கிலுடைய ஆட்சிக் காலப்பகுதியில் கொலை, நஞ்சூட்டல், நாடுகடத்தல், சித்திரவதை செய்தல் முதலான பல கொடுமைகளுக்கு அலவியாக்கள் உள்ளாக்கப்பட்டனர். முடிந்தவரை ஆட்சியானது கண்ணில் படாதவாறு மறைந்து வாழவே அலவீக்கள் விரும்பினர்...[13]
முதவக்கில் ஒரு பொய்க் கனவைச் சொல்லி இமாம் ஷாபிஈயைப் பின்பற்றுமாறு மக்களைத் தூண்டினார் ஆனால் இமாம் ஷாபிஈ அவர்களோ அச்சந்தர்ப்பத்தில் உயிரோடு இருக்கவில்லை. இதனூடான முதவக்கிலின் நோக்கம், அஹ்லுல்பைத் இமாம்களை பின்பற்றுவதிலிருந்து மக்களை திசை திருப்பி விடுவதாகும்..[14]
ஹிஜ்ரி 236ல், முதவக்கில், இமாம் ஹுஸைனின் கப்றையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் உடைக்கும்படியாகவும், அங்கு பயிர்ச்செய்கை செய்யும் படியாகவும் கட்டளை பிறப்பித்ததோடு, அதனை சியாரத் செய்வதையும் தடை செய்தார். இதனால், இமாம் ஹுஸைன் அடக்கஸ்தலம் தரைமட்டமாக்கப்பட்டு பாலைவனம் போல் காட்சியளித்தது..[15]
இமாம் ஹுஸைனின் அடக்கஸ்தலம், தனது ஆட்சிக்கு எதிரான அலைகளைத் தோற்றுவிக்கும் மத்திய நிலையமாகவும் அன்னாருக';கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அவர்களது ஷஹாதத்தும் தனது ஆட்சியின் அநீதிகளுக்கெதிராக மக்கள் புரட்சியிலும் எழுச்சியினும் ஈடுபடுவதற்கு இமாம் ஹுஸைன் நினைவுகள் அமைந்து விடுமோ என்றும் முதவக்கில் அச்சம் கொண்டிருந்தார்.
எனினும், இமாம் ஹுஸைனை உண்மையாக நேசித்து வந்த எவரும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள அப்புனித பகுதியை சியாரத் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி, கப்றின் சிதைவுகளை தொடராக புனர்நிர்மாணம் செய்வதிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால், முதவக்கில் பதினேழு தடவைகள் இமாம் ஹுஸைனின் கப்றை அழித்ததாக அறிவிக்கப்படுகின்றது.
மேலும், முதவக்கில், அவ்அடக்கஸ்தலத்தை தரிசிக்க வருவோரை பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கியதோடு, அப்பிரதேசம் முழுவதும் பெரும் கண்காணிப்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவ்வாறான அனைத்து கொடுமைகளைப் புரிந்த போதிலும், இமாம் ஹுஸைனை தரிசிப்பதிலிருந்து மக்களைத் தடுக்கும் தனது பிரயத்தனத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இமாம் ஹுஸைன் மீது பற்றுக் கொண்டவர்கள், முதவக்கில் மேற்கொண்ட பல்வேறு துயரங்களையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டவாறு தமது அன்புக்குரிய இமாமின் அடக்கஸ்தலத்தை தரிசித்து வந்தனர்..[16]
முதவக்கில் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னால் அஹ்லுல்பைத் நேசர்களும் அலவியாக்களும் இணைந்து இமாம் ஹுஸைனின் புனித அடக்கஸ்தலத்தை மீளக்கட்டியெழுப்பி அதனைப் பாதுகாத்துக் கொண்டனர்.[17]
இமாம் ஹுஸைனின் அடக்கஸ்தலம் தகர்க்கப்பட்டமை முஸ்லிம்களை மிகவும் சீற்றம் கொள்ளச் செய்தது. பக்தாத்வாசிகள் முதவக்கிலுக்கு எதிராக பல வசைக் கவிதைகளை சுவர்களிலும் பள்ளிவாயல்களிலும் எழுதினர். முதவக்கிலின் சர்வதிகார ஆட்சிக்கு மத்தியிலும் கவிதை மூலமாக அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
'நபியின் திருப்பேரரை புவி நடுங்கக் கொன்று விட்ட
குபேர உமையாக்களை கோடிமுறை விஞ்சிச் சென்று
கொலையிலே பங்கெடுக்க முடியாத கவலையினை கப்றைத் தூளாக்கி, தீர்த்து மகிந்துனரே.' [18]
தமது காலத்து தொடர்பு சாதனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலும், பள்ளிவாயல், அதன் மிம்பர், ஒன்று கூடல்கள், பிரசனங்கள் என்பன ஆட்சியாளர்களின் கைகளில் சிக்குண்டுள்ள நிலையிலும் இந்த மக்கள் தமது எதிர்ப்பையும் வெறுப்பையும் இந்த வகையிலே வெளிப்படுத்தினார்கள்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து கொண்ட அக்கால கவிஞர்கள் தம்மிடமுள்ள ஆற்றல்களைப் பயன் படுத்தி முதவக்கிலுக்கு எதிரான கவிதைகளையும் பாடல்களையும் அப்பாசியரின் குற்றச்செயல்களையிட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மறுபுறத்தில், தமக்கெதிரான எதிர்ப்பை நசுக்குவதிலே முதவக்கில் எவ்வித கருணையும் காட்டவில்லை உலமாக்கள், கவிஞர்கள் தனக்குக் கட்டுப்பட மறுத்த குழுக்களை கொடூரமாக கொன்று குவித்தார்.
யஃகூப் இப்னுஸ் ஸிக்கீத் தலை சிறந்த மொழிவல்லுனர் புகழ்பெற்ற கவிஞராகவும் இலக்கியவாதியாகவும் விளங்கினார். அவர் முதவக்கிலுடைய பணிப்பின் பேரில், அவரது புதல்வர்களான முஃதஸ், முஅய்யத் ஆகியோருக்கு கல்வி போதித்து வந்தார்.
ஒருமுறை முதவக்கில், இப்னுஸ் ஸிக்கீத்திடம் 'உங்களுக்கு மிக விருப்பமானவர்கள் யார்? எனது இவ்விரு புதல்வர்களுமா? அல்லது ஹஸன், ஹுஸைனா?' எனக் கேட்டார்.
அதற்கு அவர், 'அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் அலீயின் சேவகராக இருந்த கம்பர் இவர்களிருவரையும் விடவும் சிறந்தவர்' எனக் கூறினார்.
இதனால் சினம் கொண்ட முதவக்கில் அவருடைய நாவை இழுத்துக் களையுமாறு உத்தரவிட்டார். இறக்கும் வரை அவரைக் கால்களின் கீழ் போட்டு மிதிக்கும் படி தன் அடிமைகளை ஏவினார்..[19]
முதவக்கில், அவரது பரம்பரையின் ஏனைய கலீபாக்களைப் போன்றே பொதுநிதியைக் கையாடுபதில் மிகத் தாபாளமாக நடந்து கொண்டார். அவரது வீண்விரயம் செய்து அழிக்கும் வழக்கம் வரலாற்றாசிரியர்களையே வியக்க வைக்கிறது. ஆடம்பரமான பல மாளிகைகளையும் அரண்மனைகளையும் அவர் நிர்மாணித்தார். சாமர்ராவில் இப்போதும் காணப்படுகின்ற முதவக்கில் கோபுர நிர்மாணிப்புக்கென அதிக பணத்தை செலவிட்டார். சுமார் பதினேழு இலட்சம் தங்க நாணயங்கள் இதற்கு செலவாயிற்று. [20]
இங்கு மிகவும் வேதனை தரும் விடயம் யாதெனில், முதவக்கில் இத்தகைய வீண் விரயங்களையும் ஆடம்பரங்களையும் மேற்கொண்டு வந்த அதே காலப்பகுதியில், மதீனாபவில் வாழ்ந்த அலவியாக்களின் பெண்கள், தொழுகையை நிறைவேற்றுவதற்குப் போதுமானளவு உடலை மறைத்துக் கொள்வதற்கான உடையையும் பெற்றிராத அளவு கொடிய வறுமையிலும் நெருக்கடியிலும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இத்துப்பொன கந்தை ஆடை ஒன்று மட்டுமே இருந்தன. அதனை தொழுகையின் போது மாறி மாறி அணிந்து தொழுவார்கள். தமது கைகளினாலேயே தைத்து அதன் மூலம் கிடைக்கும் சிறு வருமானத்தில் வாழ்க்கையைத் தள்ளிச் சென்றார்கள். முதவக்கில் மரணிக்கும் வரை, இத்தகைய கடின நெருக்கடியும் கஷ்டமும் அவர்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன. [21]
அமீருல் முஃமினீன் ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் மீது பொறாமை கொண்டிருந்த முதவக்கில் அவர்களது உபதேசங்களையும், நன்மொழிகளையும் இழிவுபடுத்துவதை விநோதமாகக் கொண்டிருந்தார் அஹ்லுல்பைத்தை எதிர்ப்போரையும் தனது ஆட்சியின் ஆதரவாளர்களையும் அழைத்து பிறரை சிரிக்க வைக்கும் விதத்தில் வந்து ஹஸ்ரத் அலீ பற்றி பரிகசிக்குமாறும், எள்ளிநகையாடுமாறும் கட்டளையிட்டார் இவ்வாறு அவர்கள் செய்த போது, அந்த ஈனத்தனமான காட்சியை, முதவக்கில், மதுபானம் அருந்தியவராகவும், வெடிச்சிரிப்பு சிரித்தவராகவும் தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தவாறு பார்த்து ரசித்தார்.[22]
முதவக்கிலிடமிருந்து இத்தகைய செயற்பாடுகள் வெளியாகியதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால், கவலையும் வேதனையும் மிக்க விடயம், இத்தகைய இழிவான மார்க்க விரோதிகளை ஏற்றுக் கொண்டிருந்ததும், அவர்களை நபிகளாரின் பிரதிநிதிகளெனவும் முஸ்லிம்களுடைய விவகாரங்களுக்கான வழிகாட்டிகளாகவும் அங்கீகரித்திருந்ததும், உண்மையான இஸ்லாத்தையும் பரிசுத்த நபியின் அஹ்லுல்பைத்தினரையும் விட்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டமையும் ஆகும்.
கொடுமைகளிலும் குற்றச்செயல்களிலும் முதவக்கிலுக்கு இருந்த மோகம் அவர் பற்றி அவவே வர்ணிக்கும் அளவுக்கு உச்ச நிலையை அடைந்திருந்தது.
முதவக்கிலுடைய அமைச்சர்களில் ஒருவரான பத்ஹ் இப்னு ஹாகான் கூறுகின்றார்:
ஒரு நாள் நான் முதவக்கிலிடம் சென்றேன். ஆழ்ந்த சிந்தனையிலும் கவலையிலும் மூழிகிய நிலையில் அவரைக் கண்டேன்.
'அமீருல் முஃமினீனே! என்ன இந்த சிந்தனை? ஆல்லாஹ் மீது ஆணையாக, பூமியிலே உங்களை விட செழிப்பான வாழ்க்கை உள்ள வேறெவரும் இல்லையே?' என்று நான் வினவினேன்.
அதற்கவர் சொன்னார், 'பத்ஹே! விசாலமான குடியிருப்பும், ஒழுக்கமுள்ள மனைவியும், வளம் நிறைந்த வாழ்க்கையும் கொண்ட ஒரு மனிதன் என்னை விட சிறந்த வாழ்க்கையில் இரக்கின்றான். அவன் எம்மைப் புரிந்து கொள்ளா விட்டால் அவனைக் கொடுமைப்படுத்துவோம். ஆவன் எம்மிடம் எதையும் கேட்காத விடயத்து அவனை ஒழித்துக் கட்டிவிடுவோம்' [23]
அஹ்லுல்பைத்தினர் மீதான முதவக்கிலின் கொடுமையும் அட்டூழியமும், எல்லை மீறிச் சென்றன. இமாம்களை நேசித்த பழிக்காக பின்பற்றிய பொதுமக்கள் இம்சிக்கப்பட்டனர். இதனால், நபியின் குடும்பத்தினரின் வாழ்க்கை, பெரும் நெருக்கடியானதாகவும் சிரமமானதாகவும் மாறியது.
முதவக்கில், மக்கா மற்றும் மதீனா பிரதேசங்களின் ஆளுநராக அல் ராஹ்ஜீ என்பவரை நியமித்திருந்தார். அந்த ஆளுநர், அபூதாலிபின் பரம்பரையினருக்கு மக்கள் உதவி செய்வதைத் தடுத்தார். தமது உணிருக்குப் பயந்த மக்கள், அலவீக்களுக்கு பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர். இதனால் அஹ்லுல்பைத்தினருக்கு வாழ்க்கை மேலும் சிக்கலாகியது.[24]
சாமர்ரா பயணம்
சமூகத்தில் இமாம்களின் செல்வாக்கும் மக்கள் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பும் அநீதியான ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சுருத்தல்களாக அமைந்தன. இதைவிட முதவக்கிலின் உள்ளத்தில் நபிகளாரின் பரம்பரையினர் மீது எழுந்த துவேச நெருப்பானது அவரது நாசகார நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கியது. இந்நிலையில், இமாம் ஹாதியை மதீனாவிலிருந்து தனக்குச் சமீபமான வேறு ஓரிடத்திற்கு இடம்பெயரச் செய்வதென்ற தீர்மானம் முதவக்கிலின் நெஞ்சில் வலுப்பெற்றது..
இதன்பிரகாரம், இமாம் ஹாதியை 234ல் மதீனாவிலிருந்து சாமர்ராவுக்கு குடிபெயரச் செய்து தனது இராணுவ முகாமொன்றின் அருகிலிருந்த ஒரு வீட்டில் அவர்களை குடியமர்த்தினர். இமாம் இவ்வீட்டிலேயே தமது இறுதிவரை வாழ்ந்து வந்தார்கள். அதாவது ஹி234 தொடக்கம் ஹி.254 வரை அவர்கள் அங்கு வாழ்ந்தார்கள். முதவக்கில், தனது கண்காணிப்பின் கீழேயே இமாமை வைத்திருந்தார். அவருக்குப் பின் வந்த கலீபாக்களும் இமாம் ஷஹீதாகும் வரை இதே போக்கையே கடைப்பிடித்தனர்..[25]
இமாமவர்கள், மதீனாவிலிருந்து சாமராவுக்கு இடம்பெயரக் காரணமாயிருந்தது அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் என்ற கர்ணரின் செயற்பாடாகும். ஆவர், மதீனாவில் யுத்தத்துக்கும் அவரே பொறுப்பாக இருந்தார், முதவக்கிலிடம் இமாமை அழைத்துச் செல்வதற்கும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டிருந்தார். இமாமை கொடுமைப்படுத்துவதே அவரது குறிக்கோளாக இருந்தது. அவரது முயற்சிகளின் தாக்கம் தம்மை அடைந்த போது, இமாமவர்கள் முதவக்கிலுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் அப்துல்லாஹ் இப்னு முஹம்மதின் அழுத்தங்களையும் அவரது பொய்க்குற்றச்சாட்டுகளையும் பற்றி தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதற்கு விடையளித்த முதவக்கில், மிக அழகான நயமான வார்த்தைகளினால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடிதத்தை இமாமுக்கு அனுப்பி, சாமர்ராவுக்கு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அக்கடிதம் பின்வருமாறு அமைந்திருந்தது.
'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருநாமத்தால். நிச்சயமாக அமீருல் முஃமினீன் முதவக்கில், தங்களது வல்லமைகளை அறிந்தவர் தங்களது நெருக்கத்தை விரும்பக் கூடியவர் தங்களது உரிமைகளை உறுதிப்படுத்துபவர் அல்லாஹ் தங்களதும் தங்களது அஹ்லுல்பைத்தினரதும் நிலைமைகளை சீர்படுத்தி வைப்பானாக. தங்களதும் அவர்களதும் கண்ணியத்தை உறுதி செய்வானாக.
தங்கள் மீதும் அவர்கள் மீதும் அமைதியை வழங்குவானாக. இவற்றின் மூலம் அமீரல் முஃமினீன் அவர்கள், தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தையும் தங்களிலும் தங்களது குடும்பத்தினரிலும் அல்லாஹ் அவருக்கென கடமையாக்கியுள்ள விடயங்களை நிறைவேற்றுவதையும் ஆசிக்கின்றார்.
மதீனா நகரில் தொழுகையையும் யுத்தத்தையும் நிர்வகிக் முனைந்த அப்துல்லாஹ் இப்னு முஹம்மதை, அமீருல் முஃமினீன் அவர்கள் பதவி நீக்கம் செய்துள்ளார். தாங்கள் குறிப்பிட்டது போன்றே, அவர் தங்களது உரிமைகளை அறியாதவராகவும், தங்களது வல்லமைகளை இருட்டடிப்பு செய்பவராகவும் இருந்துள்ளார். அமீருல் முஃமினீன் அவர்கள், தவறுகளிலிருந்து பரிசுத்தம் பெற்றள்ள தங்கள் நிலையையும், சொல்லிலும் செயலிலுமான தங்களது எண்ணத் தூய்மையையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார். நிச்சயமாக தாங்கள் அவரது வேண்டுகோளை நிராகரித்து அவரது மனம் நோகச் செய்யமாட்டீர்கள். அமீருல் முஃமினீன் தங்கள் மீது மிக்க நேசம் கொண்டுள்ளார். தங்களது முகத்தைப் பார்ப்பதற்கும் தங்களுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கும் விரும்புகின்றார்.
எனவே, அவரை சந்திப்பதில் தங்களுக்கும் நாட்டம் இருப்பின், தங்களுக்குப் பிடித்தமான தங்களது உறவினர்கள், நண்பர்கள், நேசர்கள் சகிதம் புறப்பட்டு தங்களது விருப்பப்படி பயணம் செய்து அமீருல் முஃமினீனின் இடத்தை வந்தடையுங்கள். தங்களுக்கு உதவியாக எவரையும் அனுப்புவதற்கு அமீருல் முஃமினீன் தயாராக இருக்கின்றார்.
அமீருல் முஃமினீன் இரு தோள்களிலும் அல்லாஹ் நன்மையை விரிவடையச் செய்வானாக. தனது சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள், நெருக்கமானவர்கள் அனைவரை விடவும் நன்மை என்ற அம்சமே அவரிடத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ளது. அல்லாஹ் தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் அருள்வானாக'
இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் முதவக்கிலின் தீய உள்நோக்கை தெளிவாக உணர்ந்திருந்தார்கள். எனினும் முதவக்கிலின் அழைப்பை நிராகரிக்கின்ற போது, அதனை துரப்புச் சீட்டாகப் பயன்படுத்தி நயவஞ்சகர்கள் முதவக்கிலைத் தூண்டி விடக்கூடும். இமாமை அழித்து விடுவதற்கு நல்ல சந்தர்ப்பமாக முதவக்கிலுக்கு இது அமைந்து விடக்கூடும். இதனால் தமது மார்க்கப் பணிகளுக்கு தற்போதுள்ள குறைந்தளவிலான சாதக நிலைகளும் இல்லாதொழிக்கப்பட்டு விடக்கூடும். என இமாம் கருதினார்கள். 'விருப்பமில்லாத நிலையிலேயே நான் சாமர்ராவுக்குச் செல்கின்றேன்' [26] என்று புறப்படும் போது இமாம் கூறிய கூற்று, முதவக்கிலுடைய தீய உள்நோக்கை அறிந்து நிர்ப்பந்த சூழ்நிலையிலேயே இமாம் அங்கு சென்றார்கள் என்பதை உறுதி செய்கின்றது.
முதவக்கிலின் கடிதம் கிடைத்ததும், இமாம் பிரயாணத்திற்கான ஆயத்தங்களை மேற்கொண்டார்கள். யஹ்யா இப்னு ஹர்ஸமா என்பவர் சாமர்ராவை அடையும் வரை துணைவந்தார். இமாம் தன் நகருக்கு வந்து சேர்ந்து விட்டதை அறிந்த முதவக்கில், ஏழைகள் வாழும் மிகவும் பின்தங்கிய வரண்ட ஹானுஸ்ஸஆலிக் எனும் இடத்தில் தங்கச் செய்தார்.
மறுநாள், பிறிதோர் இடத்தில் அவர்களுக்கென ஒரு வீட';டைத் தயார் செய்து இமாமை வரவழைத்து அவ்வீட்டில் அவர்களை தங்க வைத்தார். வெளிப்புறத்தில் இமாமுடன் மரியாதையாக நடந்து கொண்ட முதவக்கில் இமாமின் நற்பெயரைக் களங்கப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்.[27]
ஸாலிஹ் இப்னு ஸபீத் கூறுகின்றார். இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் அக்கிராமத்தை வந்தடைந்த போது, நான் அவர்களிடம் சென்று, 'நான் தங்களுக்கு அர்ப்பணம். இந்த ஆட்சியாளர்கள் தங்களது ஒளியை அணைத்து விடவும் தங்களை மலினப்படுத்தவுமே விரும்புகின்றனர். அதன்காரணமாகவே இந்த வரண்ட பூமியில் தங்களை தரையிறக்கியுள்ளனர்' என்று கூறினேன்.
'இப்னு ஸயீதே! நீரும் இங்குதான் இருக்கின்றீரா?' எனக் கேட்க இமாம் தமது கைகளினால் சமிக்ஞை செய்தார்கள். உடனே, அந்த வரண்ட பூமி பசுமை குமையும் செழிப்பான நந்தவனமாக திடீர் மாற்றம் பெற்றது. சலசலத்து ஓடும் சிற்றாறுகளும், அழகிய தோட்டங்களும், நறுமணம் வீசும் மலர்ச்செடிகளும், முத்துகளைப் போன்று மின்னும் சிறுவர்களுமாய் அப்பிரதேசம் கண்ணைப் பறிக்கும் வண்ணம் பளபளத்தது. எனது பார்வை விரிந்தது. வியப்பு என்னை விழுங்கியது. இமாம் கூறினார்கள்: 'நாங்கள் எங்கு இருந்தாலும் இது தான் நமது இடம் நாம் இருப்பது ஹானுஸ்ஸஆலிக்கில் இல்லை' [28]
இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் சாமர்ராவில் இருந்த காலப்பகுதியில் மிகக் கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆட்சியாளர்களதும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களதும் பிற்போக்கு நிலையை தெளிவுபடுத்தக்கூடியதுமான பல நிகழ்வுகள் அங்கு நடந்தேறின.
அஸ்ஸகர் இப்னு அபீதாலிப் அல் கர்ஹீ கூறுகின்றார்: முதவக்கில், இமாம் ஹாதிக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஒருமுறை அவர்கள் இருந்த பகுதிக்கு நான் சென்றேன். இமாமை கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்டிருந்த முதவக்கிலின் அதிகாரிகளில் ஒருவரான ஸர்ராபீ என்பவரை சந்தித்தேன். நானும் அவரும் சில விடயங்களை அளவளாவினோம். 'நிச்சயமாக ஹஸ்ரத் அலீ அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள். நான் அவர்களது வழியிலேயே உள்ளேன்' என அவர் இரகசியமாக என்னிடம் கூறினார். நான் அல்லாஹ்வைப் புகழ்ந்தேன்.
பின், அவர் என்னிடம் 'என்ன விடயமாக நீர் வந்துள்ளீர்?' என வினவினார். 'இமாமை சந்திக்க வேண்டும்' என நான் கூறினேன். அவர், தனது பணியாளர் ஒருவரை அழைத்து அந்தக் கைதியிடம் அழைத்துச் செல் எனப் பணித்தார்.
நான் இமாமின் அறைக்குச் சென்றேன் அவர்கள் ஒரு பாயில் அமர்ந்திருந்தார்கள். அவரருகில் ஒரு கப்று தோண்டப்பட்டிருந்தது அவர்களுக்கு நான் சலாம் கூறினேன். பதில் சொன்ன அவர்கள், என்னை அமரும்படி பணித்து விட்டு, நான் வந்த விடயம் பற்றி விசாரித்தார்கள்.
'என் தலைவரே! தங்களது செய்திகளை அறிந்து கொள்வதற்காகவே நான் வந்துள்ளேன்' என நான் கூறினேன்.
அவர்களது நிலையைப் பார்த்து நான் அழுதேன். ஆப்போது இமாம் 'ஸகரே! நீர் கவலைப்பட வேண்டாம். தீங்கு நன்மை வந்தடையாது' எனக் கூறினார்கள். நான் அல்லாஹ்வைப் புகழ்ந்தேன்.
பின்னர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது ஒரு ஹதீஸ் தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டறிந்த பின்னர், அவர்களிடம் விடைபெற்று அங்கிருந்து வெளியே வந்தேன். [29]
'முரூஜுஸ்ஸஹப்' எனும் நூலில் மஸ்ஊதி எழுதியுள்ளதாவது,
இமாம் ஹாதி முதவக்கிலுடைய ஆட்சிக்கு எதிராக சதி செய்வதாகவும், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான புரட்சிக்கென ஆயுதங்களை சேகரித்து வைத்துள்ளதாகவும் முதவக்கிலுக்கு ஒரு தகவல் கிடைத்தது. உடனே முதவக்கில், இமாமை பிடித்து வருமாறு தனது படையினரை அனுப்பினார்.'
இமாமின் வீட்டில் அடாத்தனமாக நுழைந்த ஏவலாளர்கள் திகைத்து நின்றனர். ஏனெனில், அங்கு கம்பளி ஆடையணிந்து மணற் தரையில் அமர்ந்து கிப்லாவை முன்னோக்கிய நிலையில் அல்குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த இமாமைத் தவிர வேறு யாரும், எதுவும் இருக்கவில்லை. எனினும், கலீபாவின் கட்டளைப்படி இமாமை அரச தர்பாருக்கு அழைத்து வந்தனர். தாம் கண்டவற்றை எடுத்துக் கூறினர்.
மதுக்கோப்பையைக் கையில் ஏந்தியவாறு மதுபான விருந்தில் அமர்ந்திருந்த முதவக்கில், இமாமை கண்டதும் திடீர் பரபரப்புக்குட்பட்டவர் போல், எழுந்து சென்று இமாமை வரவேற்றார். தனக்கு அருகில் அவர்களை அமரச்செய்து. தனது கையிலிருந்த மதுக்கோப்பையை அவர்களுக்கு முன் நீட்டினார். இமாம் முதவக்கிலை நோக்கி, 'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் மீது ஆணையாக, மதுபான என் உடலிலோ, குருதியிலோ எப்போதும் கலக்கமாட்டாது' எனக் கூறினார்கள்.
அதனை ஏற்றுக் கொண்ட முதவக்கில், இமாமைப் பார்த்து, சபையில் ஒரு கவிதை பாடும்படியாக வேண்டிக் கொண்டார். இமாம் மறுத்தார் எனினும் வற்புறுத்தல் காரணமாக பாடிய கவிதை.
மலைகளால் சூழ்ந்த கோட்டைகளில் வாழ்ந்தார்கள். படைகளிடம் தோற்றபோது அரண்ககளால் என்ன பயன்?
படாபமாய் இருந்தோர்படுகுழியில் வீழ்ந்தார்கள் பாவம், இறுதியில் போன இடம் நரகமன்ரோ.
மண்ணறையுள் சென்றபோது மலக்கு விசாரித்தார் மாடமாளிகைகள் அரண், வேலி, கோட்டை எங்கே
மகிழ்ச்சி பொதிந்த மதிவதன மாதர் எங்கே நெகிழ்ந்து ஆடிய நடனமும் இசையும் எங்கே.
மண்ணறை திறந்து மாந்தருக்குக் காட்டிடுமாம்
மதிவதனங்கள் இங்கே மண்புழுவின் உணவாச்சு
காலா காலமெல்லாம் குடித்தீர்கள், உண்டீர்கள்
காலம் வந்ததினி, உங்களையே உண்கிறதே.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த முதவக்கில் அழத்தொடங்கினார். அவரது கண்ணீரினால் அவரது தாடி நனையும் வரை அழுதார். அவரைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் அழுதனர்.
ஆதன்பின் முதவக்கில், நாற்பதினாயிரம் தீனார்களை இமாமுக்கு நன்கொடையாக வழங்கி மிக்க மரியாதையுடனும் கௌரவத்துடனும் அவர்களை அனுப்பி வைத்தார். [30]
ஒருமுறை கலீபா முதவக்கில் கடுமையாக நோயுற்றார். இமாமின் ஆலோசனையின் பிரகாரம் சிகிச்சை மேற்கொண்டமையினால் அந்நோய் குணமாயிற்று. இதனால் மகிழ்ச்சியடைந்த முதவக்கிலின் தாயார், கூடவே தனது முத்திரையிடப்பட்ட பேழையில் பத்தாயிரம் தீனார்களை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார்.
சில நாட்களுக்குப் பின்னால், பத்ஹாயி என்பவன் இமாமைப் பற்றிய பொய்யான தகவல்களை எடுத்துக் கொண்டு முதவக்கிலிடம் வந்தான் இமாம் ஆயுதங்களை; வைத்திருப்பதாகவும், பெருந்தொகையான பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும் கூறினான். இதனால் பதற்றமடைந்த முதவக்கில், ஸயீத் என்ற தன் பணியாளனை அழைத்து, இரவு நேரமொன்னில் இமாமின் வீட்டுக்குச் சென்று வீட்டைத் தாக்கிஅ ங்கிருக்கக்கூடிய பணம், ஆயுதம் அனைத்தையும் பறிமுதல் செய்து கொண்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
ஸயீத் அனுபவத்தை இப்ராஹீம் இப்னு முஹம்மதிடம் இவ்வாறு விவரிக்கிறார்.
நான் இரவு நேரத்தில் இமாம் ஹாதியின் வீட்டுக்குச் சென்றேன். என்னிடமிருந்த ஏணியின் உதவியினூடாக வீட்டின் மேற்கூரைக்கு ஏறிச் சென்று, உள்ளே இறங்க முயற்சித்தேன். ஆனால், எங்கும் இருள் சூழ்ந்திருந்ததனால், மேலே இருந்த என்னால் கீழே இறங்க முடியவில்லை.
அவ்வேளையில் இமாமின் குரல் கேட்டது 'ஸயீதே! நீர் இறங்குவதற்கு வசதியாக விளக்கொன்றைக் கொண்டு வருகிறேன். அதுவரை அங்கேயே இரும்' என்று கூறினார்கள்.
அவர்கள் என்னை அவதானித்து விட்டார்கள் என்பதை உணர்ந்து திடுக்கமுற்ற நான், அவர்கள் விளக்கு கொண்டு வரும் வரை காத்திராது உள்ளே இறங்கி விட்டேன். அப்போது இமாமை அவதானித்தேன். கம்பளியாலான ஓர் அங்கியும், தலைப்பாகையும் அணிந்திருந்தார்கள் கிப்லாவின் பக்கம் முகம் நோக்கியவர்களாக இருந்த அவர்கள், என்னிடம் 'நீர் வீட்டை சோதனையிடலாம்' என்று கூறினார்கள்.
நான் உள்ளே நுழைந்தேன். சோதனையிட்டேன். எதிர்பார்த்து வந்த எவற்றையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயினும், முதவக்கிலுடைய தாயாரின் மோதிரத்தினால் முத்திரையிடப்பட்ட ஒரு பையும், அதனுடன் வேறொரு பணப்பையும் அங்கிருப்பதை அவதானித்தேன். அவற்றை எடுத்துக் கொண்டேன்.
இமாம் என்னிடம் 'முசல்லாவை எடுத்து விட்டுப் பாரும்' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்த போது, முசல்லாவின் கீழே உறையிடப்படாத கூரிய வாளொன்று இருப்பதைக் கண்டேன். அதனையும் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டே கலீபாவிடம் சென்றேன்.
பேழையின் மீது தனது தாயினுடைய மோதிர முத்திரையைக் கண்ட முதவக்கில், தாயை தன்னிடம் வரவழைத்து அது பற்றி வினவினார். அப்பெண்மணி கூறினார்: 'மகனே! நீ நோயுற்றிருந்த போது, உனது நோய் குணமாக வேண்டும் என நான் பிரார்த்தித்தேன். குணமாகினால் பத்தாயிரம் தீனார்களை இமாமுக்கு வழங்குவதென நேர்சசை செய்தேன். அல்லாஹ்வின் உதவியால் உனது நோயும் குணமானது. எனது நேர்ச்சையை நிறைவேற்றும் பொரட்டு நான் இமாமுக்கு இப்பணத்தை அனுப்பி வைத்தேன்.'
முதவக்கில், அடுத்த பையைத் திறந்து பார்த்தார். அதனுள் நானூறு தீனார்கள் இருந்தன. அவற்றுடன் இன்னும் ஒரு பேழையை வைத்த முதவக்கில், என்னிடம் 'பையையும், வாளையும் எடுத்துச் சென்று இமாமிடம் மீள ஒப்படைத்து விடு' எனக்கூறினார்.
நான் அதனை எடுத்துக் கொண்டு இமாமின் வீட்டுக்கு நடந்தேன். இமாமின் முன்னால் எப்படி நிற்பது என எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவர்களின் முன்னால் சென்று, 'என் தலைவர் அவர்களே! தங்களது அனுமதியில்லாமல் தங்களது வீடு;டுக்குள் நுழைந்து என்னை தாங்கள் கண்ணியப்படுத்தினீர்கள். நான் எனக்கிடப் பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டி இருந்தது என்று கூறினேன்.
இமாம் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்: 'அக்கிரமம் புரிந்தவர்கள் தாம் எந்த முடிவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்' [31]
முதவக்கிலின் கொடுங்கோலாட்சி முடிந்தது. அவரது மகன் முன்தஸரின் தூண்டுதலில் ஆயுதமேந்திய துருக்கிய மமாலீக்குள் சிலர், மதுபானத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கியிருந்தவர்களான முதவக்கிலையும் அவரது பிராதன அமைச்சர் பத்ஹ் பின் ஹாகானையும் படுகொலை செய்தனர். அதன் மூலமாக முதவக்கில் என்ற நாசகார மனிதனில் தீங்கிலிருந்து நிம்மதி பெற்றது. [32]
முதவக்கில் கொலை செய்யப்பட்ட அதே நாளில் ஆட்சியைக் கையேற்றார் முன்தஸிர், தனது தந்தையின் சில ஆடம்பர அரண்மனைகளை தகர்க்குமாறு கட்டளை பிறப்பி;த்தார்.[33] அலவீக்களுக்கு எவ்வித தொந்தரவையும் அவர் கொடுக்கவில்லை. அவர்கள் மீது அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தியதோடு, இமாம் ஹுஸைனின் கப்றை தரிசிப்பதற்கு அரச அங்கீகாரத்தையும் வழங்கினார்.
தரிசிக்க வரும் யாத்திரிகர்களை சிறப்பாக கவனிப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.[34] அஹ்லுல்பைத்தினரிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட பதக் தோட்டத்தை, இமாம் ஹஸனுடையவும் இமாம் ஹுஸைனுடையவும் பரம்பரையினருக்கு மீள ஒப்படைத்தார் அபூதாலியுடைய குடும்பத்தினருக்கு உரித்துடைய சொத்துகள் மீதிருந்த தடையுத்டதரவை நீக்கினார்.[35] முன்தஸிருடைய ஆட்சிக்காலம் மிகக் குறைவானதாக இருந்தது. ஆறு மாதங்கள் மட்டுமே அவரது ஆட்சி நிலைத்திருந்தது. அவர் ஹி. 248ல் வபாத்தானார்கள்.[36]
முன்தஸிருக்குப் பின் அவரது சிறிய தந்தையின் புதல்வாரன முஸ்தயீன் ஆட்சியைப் பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே ஆட்சியிலுருந்த முஃதஸிமின் பேரனாவார். ஆவர் தனக்கு முந்திய கலீபாக்களின் பாதையில் தன் ஆட்சியை மேற்கொண்டார். அவரது அநீதியான ஆட்சிக்கெதிராக அலவீக்களில் சிலர் பெரும் புரட்சி மேற்கொண்டனர். அவர் கொலை செய்யப்படும் வரை புரட்சி தொடர்ந்து கொண்டேயிருந்தது.
முஸ்தயீனால் தனது இராணுவத்திலிருந்த துருக்கிய நீக்கிய மமாலீக்குளின் எதிர்ப்பைக் சமாளிக்க முடியவில்லை. துருக்கியர்கள், சிறையிலிருந்த முஃதஸ்ஸை வெளிக்கொணர்ந்து அவரை ஆட்சித் தலைவரென ஏற்று சத்தியப்பிரமாணம் செய்தனர். இதனால் முஃதஸ்ஸின் செல்வாக்கு அதிகரித்தது.
ஆட்சியை தொடர்ந்து நடத்த முடியாதபடி முஸ்தயீன் எதிர்கொண்டஆபத்துகளும் நெருக்கடிகளும் முஃதஸ்ஸுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்த்திற்கு அவரைத் தள்ளின. எனினும், வெளிப்படையில் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துக்கொண்ட முஃதஸ், முஸ்தயிநன சாமிர்ராவுக்கு வரும் படி அழைத்து, வழியில் அவரைக் கொலை செய்தார். [37]
முஸ்தயீன் ஆட்சி செய்த காலத்தில், அவரது போக்கு, தனக்கு நெருக்கமானவர்களும் ஆட்சியில் செல்வாக்குப் பெற்ற துருக்கியர்களும் பைத்துல்மால் நிதியை மோசடி செய்வதையும், தமது விருப்புக்கேற்றாற் போல் கொள்ளையிடுவதையும் அனுமதிக்கும் படியாக அமைந்திருந்தது. [38]
அதேவேளை, அஹ்லுல்பைத் இமாமுடன் கடினப் போக்கை கடைப்பிடித்தார். சில அறிவிப்புகளில், முஸ்தயீன், இமாம் ஹஸன் அஸ்கரி அவர்களினால் சபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அவரது காலம் முடிந்தது.[39]
முஸ்தயீனுக்குப் பிறகு, முதவக்கிலின் மற்றொரு புதல்வரும் முன்தஸிரின் சகோதரருமான முஃதஸ் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர், அலவீக்களுடைய விடயத்தில் மிகவும் தீங்காக நடந்து கொண்டார். அவரது ஆட்சியின் போது, எண்ணற்ற அலவியர்கள் நஞ்சூட்டப் பட்டனர் அல்லது கொலையுண்டனர் இவரது ஆட்சிக்காலத்தின் போதே இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் ஷஹீதானார்கள்.
இறுதியில் மமாலீக் தலைவர்களும் ஏனயோரும் இணைந்து மேற்கொண்ட அரச எதிர்ப்புக்கு முஃதாஸ் முகங்கொடுத்த அவர்கள் முஃதாஸ்ஸை ஆட்சியிலிருந்து நீக்கியதோடு, அடித்துக் காயப்படுத்தி, பாதாளச் சிறையிலும் தள்ளிரன். முஃதஸ் உள்ளேயே மாண்டு போனார்..[40]
இமாமின் மரணம்
இமாம் ஹாதியின் வரலாற்றை ஆய்வு செய்யும் எவரும், இந்த சங்கையை இமாம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கடினமான முற்றுகைக்கும் மத்தியிலேயே தமது வாழ்க்கை முழுவதையும் கழித்தார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்வார்கள்.
இமாம் ஹாதியின் காலத்தில் மட்டுமன்றி, உமையா மற்றும் அப்பாசியா ஆட்சிக்காலத்தில் சொற்பமான காலப்பகுதியைத் தவிர, ஏனைய அனைத்து காலங்களிலும் இந்நிலையே நீடித்திருந்தது.
ஆநியாயக்கார ஆட்சியாளர்கள், தமது பாதங்களினால் சமூகத்தை நசுக்கினார்கள். மனிதர்களை கசக்கிப் பிழிந்தார்கள் தமது தமது சுயநலன்களையும் தனிப்பட்ட வாழ்க்கை செழிப்புகளையுமே அடைந்து கொள்ள முனைந்தார்கள். இந்த அநீதியான ஆட்சியாளர்களின் சர்வதிகாரத்தின் போது, அவர்களது கொடுங்கோன்மைக்கெதிராக மக்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறும், பரிசுத்த இமாம்களின் தலைமைத்துவத்தை பிரகடனப்படுத்தி அவர்களது உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியாதவாறும் பயமும் திடுக்கமும் மக்களை ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இமாம் ஹாதியுடனான மக்களின் தொடர்பு மிகவும் மட்டுப்படுத்தப் பட்டிருந்தது அக்கால அப்பாசிய அரசாங்கம், மதீனாவிலிருந்து ஆட்சியின் தலைநகரான சாமர்ராவுக்கு வரவேண்டுமென இமாமை வற்புறுத்தியது. ஆவர்களை தனது கொடுமையான கண்காணிப்பின் கீழ் நிறுத்தி வைத்தது. தம்மீது திணிக்கப்பட்ட இத்தகைய நெருக்கடிகளின் காரணமாக, இமாம் சொல்லொணா துயரங்களையும் துன்பப் பழுக்களையும் சுமந்தார்கள். எனினும், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு அவர்கள் அடிபணியவே இல்லை.
இமாமவர்களின் சக்திவாய்ந்த தனிமனித இயல்பு, சமுகத்தின் மத்தியில் அவர்களுக்கிருந்த உயர்ந்த அந்தஸ்து, அவர்களது பரம்பரை மதிப்பு, ஆட்சியாளரை ஆதரிக்காத தனிப் போக்கு இவையனைத்தும் அநீதியாளர்களுக்கு பெரும் தடையாகவும் கசப்பாகவும் இருந்து வந்தன. இதனால் பலரிடமும் ஆலோசனை மேற்கொண்ட அப்பாசியர் இமாமை படுகொலை செய்து அல்லாஹ்வின் ஜேதியை அணைப்பதெனத் தீர்மானித்தனர்.
இவ்வாறு, இமாம் ஹாதியும் தமது தந்தை, மற்றும் பாட்டனார்களைப் போன்றே இயற்கையாகவன்றி அப்பாசிய கலீபா முஃதஸ்ஸின் ஆட்சியில் நஞ்சூட்டப்பட்டு கொல்லப் பட்டார்கள்.[41] ஹிஜ்ரி 254ல் ரஜப் மூன்றாம் நாள் அவர்கள் ஷஹீதானார்கள். சாமர்ராவிலிருந்து அவர்களது இல்லத்திலேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.[42]
இமாம் ஷஹீதான போது, முஃதஸ்ஸும் அவரது அமைச்சர்களும் இமாம் மீது தாம் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என வெளிக்காண்பிக்க பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டனர். தமது கீழான நோக்கங்களையும், கொடூரமான குற்றச்செயல்களையும் மறைத்துக் கொள்வதற்காக இமாமின் ஜனாஸா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் பூரணமாகக் கலந்து கொண்டார்கள்.
அஹ்லுல்பைத்தினருடைய கருத்தின்படி, ஒரு பரிசுத்த இமாமுக்கான ஜனாஸா தொழுகையை மற்றொரு பரிசுத்த இமாம் மாத்திரமே நடாத்த முடியும். எனவே, இமாம் ஹாதியின் புதல்வர் இமாம் ஹஸன் அஸ்கரீ அவர்கள், ஜனாஸா வீட்டிலிருந்து வெளியாகுமுன் தமது தந்தைக்கான தொழுகையை வீட்டில் வைத்து தாமே நடாத்தினார்கள். [43]
ஜனாஸா வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்ட போது, அதற்கான தொழுகையை நடாத்தும்படியாக கலீபா முஃதஸ், தனது சகோதரர் அஹ்மத் இப்னு முதவக்கிலைப் பணித்தார். அபூஅஹ்மத் ஜனாஸா தொழுகை நடாத்தினார்.. தொழுகைக்கென திரண்ட மக்கள் வெள்ளத்தினால் வீதி நெருக்குண்டது. அழுகையும் ஓலக்குரல்களும் எங்கும் எதிரொலித்தன.
ஜனாஸா தொழுகையும் ஏனைய கடமைகளும் முடிந்த பின்னால் இமாமின் தூய உடல் மீண்டும் அவர்களது வீட்டுக்கே கொணரப்பட்டு, அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.[44] அவர்கள் மீதும் அவர்களது மூதாதையர்கள் மீதும் அல்லாஹ் சாந்தியையும் சமாதானத்தையும் அருள்வானாக.
அற்புதங்கள்
இமாம்கள், தமது இமாமத் மற்றும் பரிசுத்தத் தன்மை கரணமாக அல்லாஹ்வுடனும் மறைவான உலகுடனும் விசேடமான தொடர்புகளை வைத்திருந்தனர் ஆன்மா அமைதி பெறவும் மற்றும் பின்பற்றுபவர்களின் பயிற்றுவிப்புக்கும் ஏற்புடைத்த வகையில் அறிவு, தெய்வீக சக்தி தொடர்பான பொருத்தமான அற்புதங்களை இமாம்கள் நிகழ்த்துவர் அவை, அவ் இமாம்கள் கூறுபவற்றின் உண்மை நிலையை ஊர்ஜிதம் செய்கின்றன.
இமாம் ஹாதியிடமும் அதிகமான அற்புதங்களைக் காணமுடியுமாக இருந்தது. வரலாறு மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் பலவற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ் அற்புதங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறுவதற்கு தனியான ஒரு நூல் அவசியமாகும். எனவே சுருக்கம் கருதி, இமாமின் அற்புதங்களில் சிலவற்றை இங்கு சுருக்கித் தருகின்றோம்.
சிறு பராயத்தில்
ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியது போன்று, இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் தமது தந்தையின் ஷஹாதத்துக்குப் பின்னர், தமது எட்டாவது வயதில் இமாமத் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டார்கள். இது அவர்களைப் பொறுத்தவரை முக்கிய அற்புதமாகும். ஏனெனில், இந்த உயர்ந்த இடத்தையும், தெய்வீக அந்தஸ்து கொண்ட பாரிய பொறுப்பையும் ஏற்றுச் செயலாற்றுவதென்பது சிறுவர்களுக்கு மாத்திரமன்றி, வயது வந்த பெரும் அறிஞர்களுக்குக் கூட இலகுவான விடயமல்ல.
அஹ்லுல்பைத் உலமாக்களும் ஹதீஸ் கலை அறிஞர்களும், இமாம் ஜவாத் அவர்களது வபாத்தின் பின்னர், அவர்களது புதல்வர் இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் அணுகி தமது பல்வேறு சந்தேகங்களுக்கும் தெளிவின்மைகளுக்கும் விளக்கம் பெற்றுத் தெளிவடைந்தார்கள். அதுமட்டுமன்றி, இமாமைப்பற்றி பிறருக்கும் விளக்கமளித்தார்கள். இவ்வாறு தான் இமாமுடன் பழக்கமாகி அவர்களுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த, வயது பெரிய பெரும் அலவீக்களும், இமாமுடன் நெருக்கமானவர்களும் தமது கேள்விகளுக்கான விடைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
அல்லாஹ்வுடைய உறுதிப்பாடும், அவனுடைய நாட்டமும், தெய்வீக வல்லமை, அறிவு என்பனவுமன்றி ஒரு சிறுவர், இத்தகைய பெரும் அந்தஸ்தையும் அனைத்து கேள்விகளுக்குமான மிகச்சரியான விடைகளை வழங்கும் அற்றலையும் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெறக்கூடிய தலைமைத்துவத்தையும் பெறுவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். தவிரவும், அவர்கள் ஏனைய சிறார்களை விடவும் தனித்துவம் பெற்றவர்களாகவும் விளங்கினார்கள்.
இது போன்றதொரு நிலையே இமாம் ஜவாத் அலைஹிஸ் ஸலாம் வாழ்விலும் இடம்பெற்றது. உண்மையில், இறைவனால் வழங்கப்படும் இமாமத் அந்தஸ்து, பொதுவான வயது, வருடங்களுடன் எவ்வகையிலும் தொடர்புபட்டதல்ல. அது, அல்லாஹ்வினது விருப்பத்தின் பரிகாரமும் அவனது ஏவலின் பிரகாரமும் பூரணத்துவம் பெறும் அம்சமாகும்.
வாஸிகின் மரணம்
ஹைரான் அல்அஸ்பாதீ கூறுகின்றார்.
நான், தலைநகரிலிருந்து, இமாம் ஹாதியைச் சந்திக்கவென மதீனாவுக்குச் சென்றேன். இமாமிடம் நான் வந்த போது, 'வாஸிகுடைய செய்திகள் ஏதேனும் உம்மிடம் உண்டா?' என இமாம் என்னிடம் வினவினார்கள்.
'நான் தங்களுக்கு அர்ப்பணம் அவர் ஆரோக்கியாக இருக்கின்றார்' என்று நான் கூறினேன். இமாம் என்னிடம் 'வாஸிக் மரணித்து விட்டதாக மதீனாவாசிகள் சிலர் கூறுகின்றனரே?' என்று வினவினார்கள்.
மதீனாவாசிகள் என அவர்கள் தம்மைத்தான் குறிப்பிடுகின்றார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பிறகு அவர்களே மீண்டும் கேட்டார்கள், 'முதவக்கிலுடைய நிலை என்ன? அதற்கு நான், 'அவர், மனிதர்களில் மிகவும் கெட்டவராகையால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்' எனக் கூறினேன்.
இமாம் என்னிடம், 'அறிந்து கொள்ளும், முதவக்கில்தான் இப்போதைய ஆட்சியாளர்' என்று கூறினார்கள்.
பின் என்னிடம், இப்னுஸ் ஸய்யாதுடைய நிலை என்ன? என வினவினார்கள். நான், 'மனிதர்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள். அவரது விடயம் அப்படியே சென்று கொண்டிருக்கின்றது' என்று கூறினேன். இமாம் சொன்னார்கள், 'அவர் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டு விட்டார்'
அதன்பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்த இமாம் என்னைப் பார்த்துச் சொன்னார்கள், ஹைரான்! ஆல்லாஹ்வடைய ஏற்பாடுகுளும் சட்டங்களும் எப்படியும் நடந்தே தீரும். இப்போது வாஸிக் மரணித்து விட்டார். அவரது இடத்தில் முதவக்கில் அமர்ந்துள்ளார். இப்னுஸ் ஸய்யாத் கொலை செய்யப்பட்டு விட்டார்'
அதிர்ச்சியடைந்த நான், 'இமாமே! இது எப்போது நடைபெற்றது?' எனக் கேட்டேன். அதற்கு இமாம் 'நீர் அங்கிருந்து வெளியாகி ஆறு நாட்களின் பின்னர் இது நடந்தது' என்றார்கள். [45]
சில சாட்கள் கழிந்த பின், கலீபா முதவக்கிலின் தூதுவன் ஒருவன் மதீனாவுக்கு வந்து, இமாம் சொன்ன அதே விடயங்களை மக்களுக்கு பறைசாற்றிச் சென்றான். [46]
துருக்கியில் உரையாடல்
அபூஹாஷிம் அல்ஜஃபரீ அறிவிக்கின்றார். வாஸிகுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், நான் மதீனாவில் இமாமுடன் இருந்தேன்.
ஒருமுறை இமாம் தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது அவர்களின் முன்னால் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் குதிரை மீNதுறிச் சென்று கொண்டிருந்தார். அவருடன் இமாம் துருக்கி மொழியில் பேசினார்கள்.
உடனே அம்மனிதர் தனது குதிரையிலிருந்து இறங்கி வந்து, இமாமின் கைகளைப் பிடித்து முத்தமிட்டார்.
என்னைப் பார்த்து, 'இவர் ஒரு நபியா?' எனக் கேட்டார். 'இவர்கள் நபியில்லை. இமாம்' என நான் கூறினேன். அதற்கு அவர் கூறினார். 'என்னுடைய சிறு வயதில் எனக்கு ஒரு பெயர் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயர் தெரிந்தவர்கள் இப்போது யாருமில்லை. ஆனால் இம்மனிதர் என்னை அப்பெயரினால் அழைக்கின்றார். அதனால்தான் அவர் நபியாக இருக்குமோ என ஐயமுற்றேன்' [47]
மிருகங்களோடு
மஸ்ஊதியின் நூலில் இருந்து தொகுத்ததாக யனாபீஉல் மவத்தா எனும் தமது நூலில், அஷ்ஷைஹ் சுலைமான் அல்பல்ஹீ எழுதியுள்ளார்.
ஒருமுறை முதவக்கில், கொடூரமான மூன்று காட்டுமிருகங்களை தனது அரண்மனையின் முன்றலில் கொணரச் செய்தார். அதன்பின் இமாம் ஹாதியை அங்கு வரவழைத்து வாயிற்கதவுகளை அடைத்து விட்டார். இதன்மூலம் அம்மிருகங்கள் இமாமை வேட்டையாடி விடும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாற்றமாக, தம்மிடம் தனித்து விடப்பட்ட இமாம் ஹாதியை அம்மிருகங்கள் சுற்றி வந்தன. அவர்களின் முன்னால் தலைதாழ்த்தி பணிந்து நின்றன.
இமாம் அவற்றை தமது கைகளினால் தடவிக் கொடுத்து விட்டு மேலே ஏறி முதவக்கிலுடைய இடத்தை அடைந்தார்கள். சிறிது நேரம் அவருடன் பேசியபின் கீழே இறங்கி வந்தார்கள்.
அப்போது அம்மிருகங்கள் முன்னர் செய்தது போன்று பணிந்து நின்நன. ஆவர்கள் சென்றபின், முதவக்கில் பெறுமதியான அன்பளிப்புப் பொருட்களை இமாமுக்கு அனுப்பி வைத்தார் அப்போது அங்கிருந்தவர்கள் முதவக்கிலை நோக்கி, 'இமாம் ஹாதி இக்கொடிய மிருகங்களுடன் நாம் ஆச்சரியப்படும் வகையில் இவ்வாறு நடந்து கொண்டார்கள். எனவே, நீங்களும் அவ்வாறு நடந்து கொள்ளலாமே' என்று கூறினார்கள்.
அதைக்கேட்ட முதவக்கில், ஆலோசனை கூறியவர்களை கோபமாகப் பார்த்துக் கொண்டே 'நான் கொல்லப்பட வேண்டும் என்றா விரும்புகின்றீர்கள்?' எனக்கடிந்து கொண்டார். பின்னர், இவ்விடயத்தை யாருக்கும் தெரிவிக்காது இரகசியம் பேணுமாறு தனது பணியாட்களுக்குக் கட்டளையிட்டார். [48]
மகத்துவம்
முஹம்மத் இப்னு ஹஸன் அஷ்தர் அறிவிக்கின்றார்.
நான் எனது தந்தையுடன் கலீபா முதவக்கிலுடைய அரசவை வாயிலில் நின்று கொண்டிருந்தேன்.
திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நான் ஒரு சிறுவனாக இருந்தேன். அப்போது, இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அவர்கள் உள்ளே சென்ற பின், அங்கிருந்த சிலர் பேசிக் கொண்டனர். 'நாம் எதற்காக இந்த சிறுவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்! இவர் எம்மை விட சிறந்தவரோ, பெரியவரோ, வயது முதிர்ந்தவரோ அல்லவே. நிச்சயமாக அவர் திரும்பி வரும் போது நாம் அவருக்கு எவ்வித மரியாதையும் செய்யமாட்டோம்'
அச்சமயம் அங்கு அமர்ந்திருந்தவர்களுள் ஒருவரான அபூஹாஷிம் கூறுகின்றார். 'இமாம் உள்ளிருந்து வெளியே வந்த போது அவர்களைக் கண்ட சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருமே எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது நான் இறுமாப்புக் கொண்டிருந்த அந்த மனிதர்களைப் பார்த்து, 'இமாமுக்கு மரியாதை செலுத்தவில்லை என்று நீங்கள் உறுதியாகக் கூறினார்களே? என்று கேட்டேன்.
அதற்கவர்கள், 'அல்லாஹ் மீது ஆணையாக, அவருக்கு மரியாதை செலுத்தாமலிருப்பதற்கு எம்மால் முடியவே இல்லை' என்று கூறினார்.[49]
உள்ளத்தில் இருந்தாலும்
துர் ரஹ்மான் எனும் அஹ்லுல்பைத் நேசர் ஒருவர் இருந்தார். அவரிடம் சிலர், 'இக்காலத்தில் உள்ள ஏனையவர்களையன்றி இமாம் ஹாதியின் இமாமத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன? என்று வினவினர்.
அதற்கவர் கூறினார். 'நான் இமாமிடம் அவர்களது இமாமத்தை வலியுறுத்தக்கூடிய சில விடயங்களை அவதானித்தேன். நான் பரம ஏழையாக இருந்து வந்தேன். இஸ்பஹான் மக்கள் என் போன்ற ஏழைகள் அனைவரையும் ஒன்றிணைத்து, கலீபா முதவக்கிலிடம் உதவி பெற்று வருமாறு அனுப்பி வைத்தனர்.
நாங்கள், கலீபாவுடைய அரண்மனை வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது, இமாம் ஹாதி இங்கு அழைத்து வரப்படுகிறார் என்ற ஒருவித பரபரப்பு வெளியானது. நான் அங்கிருந்தவர்களிடம், 'அம்மனிதர் யார்?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'அவர் அலவீன்களில் ஒருவர் அவர் ஓர் இமாமென அஹ்லுல்பைத்தினரால் நம்பப்படுகின்றார்' எனக் கூறினர். மேலும், 'முதவக்கில், அம்மனிதரை கொலை செய்வதற்காகவே இங்கு அழைத்து வந்துள்ளார்' என்றும் கூறினர்.
'அவரே யார் என நான் பார்க்க வேண்டும். என விரும்பினேன் பொதுமக்கள், இமாமை பார்ப்பதற்காக பாதையின் வலது, இடது புறங்களில் திரண்டிருந்தனர். இமாம் அவ்வழியாக குதிரை மீது வந்தார்கள். அவர்களைப் பார்த்த மறுகணமே அவர்கள் மீது எனக்கு அன்பும் இரக்கமும் மரியாதையும் ஒரு சேரத் தோன்றின. முதவக்கிலுடைய தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்ற வேண்டுமென என் மனதுக்குள் நான் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.
இமாம் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாது பூமியைப் பார்த்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நான் எனது பிரார்த்தனையை விடாது தொடர்ந்து கொண்டிருந்தேன். அவர்கள் என்னருகில் வந்த போது, தமது முகத்தை என் பக்கம் திருப்பினார்கள். அமைதியாக என்னைப் பார்த்துச் சொன்னார்கள். அல்லாஹ் உமது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். ஆவன் உமது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவன் உமது ஆயுளை அதிகரிப்பானாக. உமக்கு அதிகமான செல்வங்களையும் பிள்ளைகளையும் நல்குவானாக'
எனது உடல் நடுங்கியது. தோழர்கள் மத்தியில் நான் விழுந்து விட்டேன். 'என்ன விடயம்?' என்று அவர்கள் என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். நான் அவர்களிடம் எதையும் அறிவிக்கவில்லை. 'ஒன்றுமில்லை என மழுப்பி விட்டேன்.
அதன்பிறகு நாங்கள் இஸ்பஹானுக்குத் திரும்பிச் சென்றோம். அல்லாஹ் எனக்கு செல்வங்களை அள்ளி வழங்கினான். இன்று என் வீட்டினுள்ளே ஆயிரமாயிரம் தீனார்கள் நிரம்பி விழுகின்றன. வீட்டுக்கு வெளியேயும் எனது சொத்துகள் பரந்துள்ளன. அத்தோடு பத்து பிள்ளைச் செல்வங்களும் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்றைய எனது வயது எழுபது வருடங்களும் சில மாதங்களுமாகும். எனது உள்ளத்திலே உள்ளதை அறிந்து கொண்ட இமாம் அற்புதம், எனக்காக செய்த அவர்களது பிரார்த்தனை முழுமையாக ஏற்றக் கொள்ளப்பட்டமை என்பவற்றின் காரணமாகவே நான் இமாம் ஹாதியை மனமார எனது இமாமாக ஏற்றுக் கொண்டுள்ளேன்' [50]
அயல் வீட்டாருடன்
இமாம் ஹாதி அயல் பாகத்திலிருந்தவர்கள் ஒவ்வொரு விதமான கைத் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர்.. அவர்களில் நகை வேலை செய்பவரான யூனுஸ் என்பவர் இமாம் ஹாதியிடம் பணிவிடை செய்து வந்தார்.
ஒரு நாள் யூனுஸ் மிகவும் நடுக்கமுற்றவராக இமாமிடம் வந்தார். இமாமைப் பார்த்து, 'எனது தலைவரே! எனது குடும்பத்தினருக்கு உபதேசிக்க வேண்டும்' என்று கூறினர்.
'என்ன விடயம்?' என இமாம் வினவினார்கள்.
'நான் நாளை இங்கிருந்து வெளியாகி விடுவதென தீர்மானித்துள்ளேன்' என்று யூனுஸ் கூறினார்.
அது கேட்ட இமாம் புன்முறுவல் பூத்தவர்களாக, ஏன் யூனுஸ?' என வினவினார்கள்.
அவர் கூறினார். 'மூஸா இப்னு பஹா நகை செய்வதற்காக என்னிடம் மிகப் பெறுமதியான மிக்க வெள்ளியை தந்திருந்தார் ஆனால், தற்செயலாக இரண்டாக உடைந்து விட்டது. நாளை அதன் வேலையை முடித்துக் கொடுக்க வேண்டிய தினமாகும். ஆனால், மூஸா இதனை அறிந்தால், ஒன்று என்னைக் கொன்று விடுவார். ஆல்லது ஆயிரம் கசையடி அடிப்பார்' என யூனுஸ் அழுதவாறே கூறினார்.
அதைக்கேட்ட இமாம் 'வீட்டுக்குச் சென்று நாளை வரை அங்கேயே இருங்கள். உங்களுக்கு நன்மையே உண்டாகும்' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.
மறுநாள் உதயமான போது யூனுஸ் நடுநடுங்கியவராக இமாமிடம் விரைந்து வந்து, 'மூஸாவின் தூதுவன் வந்திருக்கிறான். நான் என்ன செய்வது?' என்று வினவினார்.
இமாம் 'நீ அவருடன் சென்று கதையும்' என்று கூறினார்கள்.
'அது உடைந்தது பற்றி அவர் கேட்டால் நான் என்ன கூறுவது?' என யூனுஸ் வினவினார்.
இமாம் 'நீங்கள் போய் அவருடன் கதையுங்கள். நல்லதேயன்றி வேறெதுவும் நடைபெறாது' என்று கூறினார்கள்.
சிறிது நேரத்தின் பின், யூனுஸ் சிரித்த முகத்துடன் அங்கு வந்தார். அவர் சொன்னார்: 'எனது தலைவரே! அந்தத் தூதுவர் மூஸாவின் பெண் மக்கள் இருவருக்கும் இரண்டு நகை செய்து தருமாறு மூஸா சொல்லி அனுப்பினாராம். கூலியை தருவதாகச் சொன்னாராம்.'
இமாம் கூறினார். இறiவா உண்மையான முறையில் உம்மைப் புகழுவோராக நம்மை ஆக்கியதற்கு முதலில் நன்னி கூறுகிறேன். சுரி நீங்கள் அவருக்கு என்ன சொன்னீர்கள்.
ஏப்படிச் செய்வது என்று யோசித்து சொல்கிறேன் என்று சொன்னேன்.
'மிக்க நன்று'[51]
அபூ ஹாஷிமைக் காப்பாறியமை
அபூஹாஷிம் அல்ஜஃபரீ கூறுகின்றார். எனக்கு மிகக் கடினமான ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அதனால் நான் இமாம் ஹாதியிடம் சென்றேன். அவர்களது அனுமதி பெற்று உட்கார்ந்தேன். அவர்கள் என்னைப் பார்த்து, 'அபூஹாஷிம்! ஆல்லாஹ்வுடைய அருட்கொடைகளில் எவற்றுக்காக நீர் நன்றி செலுத்த விரும்புகின்றீர்?' எனக் கேட்டார்கள்.
நான் திடுக்கிட்டேன். அவர்களுக்கு என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. இமாம் மீண்டும் கூறினார்கள். 'அல்லாஹ் உமக்கு ஈமானை வழங்கி, நரக நெருப்பிலிருந்து உமது உடலை விலக்கினான். உமக்கு ஆரோக்கியத்தை வழங்கி, அவனை வழிபடுவதற்கு உதவி செய்தான். உமக்குப் போதமானதை வழங்கி வீண் விரயத்திலிருந்து உம்மைப் பாதுகாத்தான்.
அபூஹாஷிமே! நூன் முதலில் ஆரம்பித்தது ஏனெனில், உமக்கு நெருக்கடி ஏற்படுத்தியவனைப் பற்றி முறையிடவே என்னிடம் வந்துள்ளீர் என்று நான் எண்ணினேன். ஊமக்காக நூறு தீனார்களை வழங்கும்படி கூறியுள்ளேன். அவற்றைப் பெற்றுக்கொள்ளும்' [52]
இமாம் பற்றிய அறிவு
ஒவ்வொரு இமாமும், தமது சமூகத்தின் தலைவர்களாகவும், அல்குர்ஆனையும் இஸ்லாமிய சட்டங்களையும் தெளிவுபடுத்துபவர்களாகவும் மாத்திரம் இருக்கவில்லை. இவற்றுக்கு மேலாக, இஸ்லாமிய கலாசாரத்தைப் பொறுத்தவரை, ஓர் இமாம். பூமியின் மீதுள்ள அல்லாஹ்வினது ஒளியாவார் உலகத்தார் அனைவருக்கும் உண்மையின் பாலான தெளிவான ஆதாரமாவார். புடைப்பினங்கள் அனைத்தினதும் வழிகாட்டியாவார் படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்குக் குமிடையே தெளிவான தொடர்பாளராவார். வானுலக பூரணத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒளி மிகு கண்ணாடியாவார் மனித சிறப்புகளின் மணிமுடியாவார் நன்மைகள் மற்றும் நற்செயல்கள் அனைத்தினதும் சங்கமம் ஆவார் அல்லாஹ்வுடைய வல்லமையும் அறிவும் பிரதி பலிக்கும் அல்லாஹ்வின் பால் தொடர்பை ஏற்படுத்த விரும்பும் மனிதனுக்கான பூரண முன்மாதிரியாவார் மறதி, இயலாமை, தவறு என்பவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்ட பரிசுத்தராவார், படைப்பினங்களின் இரகசியங்கள், மறைவான உலகுடனும் மலக்குகளுடனும் தொடர்புடையவராவார். இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்ன நடந்தன, என்ன நடைபெறும் என்ற விடயங்கள் பற்றித் தெளிவுள்ள அறிஞராவார். தேய்வீக இரகசியங்களின் பொக்கிஷமாகவும், நபிமார்களுடைய பூரணத்துவங்கள் அனைத்தினதும் வாரிசாகவும் விளங்குகின்றார்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களது குடும்பமான அஹ்லுல்பைத்தினரதும் அந்தஸ்து மிகவும் உயர்ந்ததாகும்.
அஹ்லுல்பைத் இமாம்களுடைய சிறப்புகள் நாம் கூறியதை விடவும் மிக அதிகமானது. நுபி (ஸல்) அவர்களதும் இமாம்களதும் அறிவிப்புகளினூடாக இதனை நாம் உறுதி செய்ய முடியும். அந்த ஹதீஸ்கள் பல்வேறு அறிஞர்களால் எழுதப்பட்ட நூல்கள் பலவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இமாம் ஹாதீ அவர்களது சியாரதுல் ஜாமிஆ மிகவும் பிரபலமான பிரார்த்தனைத் தொடராகும். அது, உயர்வான தெய்வீக ஞானங்களை விபரிக்கின்ற தனித்துவமான சொல்லாடல்களைக் கொண்டது. இமாம்களை உண்மைப்படுத்தி உவப்புக் கொள்ளக்கூடிய நேசர்கள் மீது அறிவியல் முத்து, இரத்தினங்களை மழையாகப் பொழிய வைக்கும் ஆழமான அறிவுக் கடலாகும்.
அது எமது அறிவுக்க எட்டும் வகையில் அமைந்தது அதிலே அல்லாஹ்வுடைய தொட்டத்தின் சில விளிம்போரங்கள் பற்றி இமாமவர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அவர்கள், தமது பேச்சின் விசாலமான ஒளிக்கதிர்கள் மூலமாக, இவ்வுலகவாசிகளான எமக்கு தெய்வீகத் தெளிவும் ஆன்மீக மகத்துவமுமிக்க வானத்தின் அந்தரங்கள் பற்றி அறிமுகப்படுத்துகின்றார்கள். சங்கையான அந்த இமாம்களது பிரதிநிதித்துவத்தின் மீது தாகமுள்ள எமக்கு, அல்லாஹ்வுடைய சுவர்க்கத்தின் கௌஸரிலிருந்து அவர்கள் தண்ணீர் புகட்டுகின்றார்கள்.
இமாம் ஹாதீ அலைஹிஸ் ஸலாம் தமது தோழர்களின் வேண்டுகோள்களை ஏற்று பலதடவைகளில் அவர்களுக்கு இமாம்களை சியாரத்து எனப்படும் பிராத்ததைன் தொடர்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். குறுகிய இந்நூலில் அவை அனைத்தையும் எடுத்துக் கூறுவது சாத்தியமற்றதாகும்.
எனினும், அவர்களது பிரார்த்தனைத் தொடர்களில் பிரதானமானதாகக் கணிக்கப்படும் சியாரத்துல் ஜாமிஆ பற்றிய அறிமுகம் எமக்கு அவசியமாகின்றது. பெரும் மார்க்க அறிஞர்கள் பலர் இந்தப் பிரார்த்தனையை அனைத்த சியாரார்களிலும் சிறப்புக்குரியது என விபரித்துள்ளார்கள். இந்த சியாராவிலுள்ள ஆன்மீக உயிரோட்டம் வளமிக்க அதன் உள்ளடக்கம், ஆழமான அறிவு ஞானம் முதலானவை இதன் அடிப்படை உயிர்ப்பு நிலையையும், இதனைக் கூறியவருடைய உயர்ந்த தெய்வீக அறிவு விசாலத்தையும் உண்மைப்படுத்தும் சான்றுகளாகும்.
இந்த சியாரத் பிரார்த்தனை மன்லாயஹ்ழுருஹுல் பகீஹ்,[53] உயூனு அக்பரி ரிழா [54] தஸ்ஹீபுல் அஹ்காம்.[55] போன்ற முக்கிய கிரந்தங்களிலும் வருகிறது.
மாணவர்கள்
இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் வாழ்ந்த காலத்தில் நிலவி வந்த அநீதியும் நெருக்கடியும் அவர்கள் மூலமாக சமூகம் பயன்பெறக் கூடிய சாத்திய நிலைகளை மிகவும் மட்டுப்படுத்தி வைத்திருந்தன எனினும், இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல்குர்ஆனிய ஞானங்கள் மீதும் அஹ்லுல்பைத்தினர் மீதும் அளவற்ற உவப்புக் கொண்டிருந்த சிலர், தமக்கு சாத்தியமானளவு இமாமவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும், ஈமான், ஞானம் என்பவற்றில் உயர் நிலை எய்துவதற்கும் முயற்சித்தனர். அஷெயித் தூஸி இமாமவர்களின் மாணவர்களாக இருந்து 185நபர்கள் பற்றி எழுதியுள்ளார் சுருக்கம் கருதி, அவர்களிலிருந்து சிலரைப் பற்றி மாத்திரம் இங்கு எடுத்துக் கூறுகின்றோம்.
அப்துல் அழீம் அல்ஹஸனீ
முக்கிய அறிஞராகவும் ஹதீஸ் அறிவிப்பாளராகவும் இருந்த இவர், இறையச்சம், மற்றும் உலகப் பற்றற்ற விடயங்களில் உயர் அந்தஸ்தில் காணப்பட்டார். சில அறிஞர்கள், இமாம் ஸாதிக், இமாம், இமாம் காழிம், இமாம் றிழா ஆகியோரிடம் கல்வி பயின்றதோடு, அவ்விரு இமாம்களது ஹதீஸ் அறிவிப்பாளர்களில் பிரபலமானவராகவும் விளங்கினார்.
ஸாஹிப் இப்னு உப்பாத் கூறுகின்றார். 'அப்துல் அழீம் அல்ஹஸனீ, மார்க்க விடயங்களில் மிக்க ஞானமுள்ளவராகவும், அல்குர்'ஆன் சட்டங்கள், சமய விதிமுறைகள் பற்றி பூரண விளக்கம் கொண்டவராகவும் இருந்தார்'
அபூஹம்மாத் அர்ராஸி கூறுகின்றார்:
'நான் இமாம் ஹாதியின் மஜ்லிஸலில் கலந்து கொள்வதற்காக சென்றேன். சில ஐயங்களை அவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமிருந்து விடைபெற நான் விரும்பிய போது, அவர்கள் என்னிடம் கூறினார்கள், 'நான் உமக்குச் கொன்ன விடயங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படின் அப்துல் அழீம் அல்ஹஸனீயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும்! அவருக்கு என்னடைய ஸலாத்தை எத்தி வையும்! '[56]
அப்துல் அழீமைப் பார்த்து, இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் 'நீர் உண்மையில் எமது பிரதிநிதி ஆவீர்' எனக் கூறுமளவுக்கு அவர் ஈமானிலும் ஞானத்திலும் மட்டிட முடியாதளவு உயர்வுற்று விளங்கினார். [57]
அப்துல் அழீம் கூறுகின்றார்: 'நான், எனது தலைவர் இமாம் ஹாதி அவர்களிடம் சென்றேன். என்னைக் கண்ட அவர்கள், 'அபுல்காசிமே வருக. நீர் உண்மையில் எமது பிரதிநிதியாவீர்' எனக் கூறினார்கள். நான் இமாமிடம் 'இறைத்தூதரின் புதல்வரே! நான் எனது மார்க்க வழிமுறை பற்றி தங்களிடம் எடுத்துக் கூற விரும்புகின்றேன். அது சரியென தாங்கள் உறுதிப்படுத்தினால் அதனை நான் தொடர்வேன்' என்று கூறினேன். 'சொல்லுங்கள் அபுல்காசிமே' என இமாம் கூறினார்கள்.
நான் கூறினேன், 'நிச்சயமாக அல்லாஹ் ஒருவனே. அவனுக்கு நிகராகவோ, எதிராகவோ எவருமில்லை. இல்லாமை ஒப்புவமை என்ற எல்லைகளை கிடையாது அவன் உடலாக, உருவமாக, பதிவாக பதிவை ஏற்பதாக எதுவாகவுமில்லை. ஆனாலும், அவனே உடல்களை உற்பத்திக்கின்றான். உருவங்களை சிருஷ்டிக்கின்றான். அவன் அனைத்தின் மீதும் இரட்சகனாகவும், உரிமையுள்ள வனாகவும், ஆக்குபவனாகவும், புதிதாக தோற்றுவிப்பவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள், அவனது அடியாராகவும் தூதராகவம் நபிமார்களின் இறுதியானவராகவும் இருக்கின்றார்கள். மறுமை நாள் வரை அவர்களுக்குப் பிறகு நபியில்லை. அவர்களுடைய மார்க்கமே இறுதியான மார்க்கமாகும். மறுமை நாள் வரை அதற்குப் பிறகு வேறு மார்க்கமில்லை.
நபிகளாருக்குப் பின் ஹஸ்ரத் அலீ, இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன், இமாம் ஸஜ்ஜாத், இமாம் பாக்கிர், இமாம்ஸாதிக், இமாம் காழிம், இமாம் றிழா, இமாம்ஸவாத், தாங்கள் இமாம்களாவீர்கள் என நான் உறுதி கூறுகின்றேன்.
இமாம் இவரிடத்தில் குறிப்பிட்டார் 'எனக்குப் பின்னர் எனது மகன் வருவார் அவரது புதல்வர் பூமியை நீதியால் நிரப்புவார் என்றார்'
அதையும் நம்புகிறேன் எனத் தொடர்ந்தார் ஹஸனீ
இமாம்களது நேசர்கள் அல்லாஹ்வின் நேசர்களாகும். அவர்களது பகைவர்கள் அல்லாஹ்வின் பகைவர்களாகும். அவர்களுக்கு வழிப்படுவது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாகும். ஆவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகும் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
நபிகளாரின் மிஃராஜ் உண்மை. கப்றிலே கேள்வி கணக்குக் கேட்கப்படுதல் உண்மை சுவர்க்கம் என்பது உண்மை. நரகம் என்பது உண்மை மறுமையில் ஏற்பாடு செய்து வைக்கப்பட்டுள்ள சிராத் என்பது உண்மை மீஸான் என்பது உண்மை. மறுமை நாள் என்பது சந்தேகமின்றி வரக்கூடியதாகும். ஆச்சமயத்தில் அல்லாஹ் கப்றில் உள்ளவர்களையெல்லாம் எழுப்புவான் என்று நான் உறுதி கூறுகின்றேன். விலாயத்துக்குப் பின்னுள்ள வாஜிபான கடமைகள், தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், ஜிஹாத், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் ஆகியவையாகும்'
இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் கூறினார்கள்: 'அபுல்காசிமே! ஆல்லாஹ் மீது ஆணையாக, இதுதான் அல்லாஹ் தன் அடியார்களுக்கென தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமாகும். இதன் மீது நீர் நிலையாக இருந்து கொள்ளும்! இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ் உமது பாதங்களை வைப்பானாக' [58]
சில வரலாற்றுக் கிரந்தங்களின் கூற்றுப்படி, அப்துல் அழீம், அக்கால ஆட்சியாளரின் கொடுமை தாங்க முடியாது பாரசீகத்துக்கு தப்பியோடி அங்குள்ள ரய் எனுமிடத்தில் தலைமறைவாக வாழ்ந்ததாக எழுதப்பட்டுள்ளது.
அப்துல் அழீம், ஆட்சியாளர்களின் அதிகாரக் கொடுங்கரங்களிலிருந்து தப்பி ரய் நகருக்கு வந்தார். அங்கிருந்த அஹ்லுல்பைத் நேசர் ஒருவரின் வீட்டின் கீழ்த்தளத்தில் தங்கினார். பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி தன் வாழ்நாட்களைக் கடத்தினார்.
சில சந்தர்ப்பங்களில் இரகசியமாக வெளியில் சென்று வருவார். அவரது இருப்பிடத்துக்கு முன்னால் ஒரு கப்று இருந்தது. அது இமாம் மூஸாவின் புதல்வர்களில் ஒருவரது கப்றாகும்.
சில நாட்களின் பின் நோயுற்ற அப்துல் அழீம் அல்லாஹ்வின் நியதிப்படி இறையடி சேர்ந்தார். அவரது உடலைக் குளிப்பாட்டுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்ட போது, அவரது சட்டைப்பையில் ஒரு துண்டு கண்டெடுக்கப்பட்டது. அதில் அவரது பரம்பரையின் தொடர் வரிசை எழுதப்பட்டிருந்தது.[59]
அப்துல் அழீமின் மரணம், இமாம் ஹாதி அவர்களது காலத்தின் போதே இடம்பெற்றது. முஹம்மத் பின் யஹ்யா அல்அத்தார் அறிவிக்கின்ற பின்வரும் நிகழ்விலிருந்து அப்துல் அழீமின் தெய்வீக அருள் பெற்ற ஆளுமையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ரய் நகரவாசிகளில் ஒருவர் இமாம் ஹாதியிடம் வந்த போது, 'நீர் எங்கிருந்து வருகின்றீர்?' என இமாமவர்கள் கேட்டார்கள். 'இமாம் ஹுஸைன் அவர்களது கப்றை தரிசிப்பதற்காக நான் சென்றிருந்தேன்' என அவர் கூறினார். அவருக்கு இமாம் கூறினார்கள். 'ஒரு விடயத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களது நகரிலுள்ள அப்துல் அழீமின் கப்றை தரிசித்தால், இமாம் ஹுஸைனின் கப்றை தரிசித்தவர் போலாவீர்கள்.[60]
அப்துல் அழீம் இமாம்களுடைய காலத்தில் வாழ்ந்த அஹ்லல்பைத் உலமாக்கள், ஹதீஸ் அறிவிப்பாளர்களில் மிகவும் பிரபலமும் உறுதியும் மிக்கவராகக் கணிக்கப்படுகின்றார். அவர், நூல்களை யாத்தார் அவர், இமாம் அலியின் குத்பாக்கள் தொடர்பாக ஒரு நூலையும், இரவும் பகலும்' எனும் தலைப்பில் ஒரு நூலையும் குறிப்பிட்டுள்ளது. [61]
ஹுஸைன் இப்னு ஸயீத் அல்அஹ்வஸி
இவர், இமாம் றிழா, இமாம் ஜவாத், இமாம் ஹாதி ஆகியோரின் தோழர்களில் ஒருவராக இருந்தார். இவ் இமாம்களிடமிருந்து பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பிறப்பில் கூபாவாசியாக இருந்த இவர், பின்னால் தனது சகோதரருடன் இணைந்து அஹ்வாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் கும் நகருக்கு வந்தார். கும் நகரிலேயே வபாத்தாகினார்.
ஹுஸைன் இப்னு ஸயீத், மார்க்கச் சட்டம், இலக்கியம், ஒழுக்கம் தொடர்பாக முப்பது நூல்களை யாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது அவரது நூல்கள் அனைத்தும் அறிஞர்களிடையே வரவேற்பும் பிரபலமும் பெற்றவை. மர்ஹும் மஜ்லிஸி கூறுவதைப் போன்று, அவரது அறிவிப்புகளின் படி அமல் செய்வதும், அவரை உறுதி கொள்வதும் முடியுமென்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தக் கொண்டுள்ளனர். ஆவரைப் பற்றி மர்ஹும் அல்லாமா குறிப்பிடும் போத, 'நிச்சயமாக அவர் நம்பிக்கைக்குரியவர் அவர் அறிஞர்களின் மிக முக்கியமானவர் அவர் தெளிவான வல்லமை கொண்டவராகவும் உள்ளார்'
மர்ஹும் ஷெய்ஹு தூஸி கூறுகின்றார்:
'ஹுஸைன் இப்னு ஸயீத், தனது அறிவு முதிர்ச்சிக்கு பகரமாக மக்களை நேர்வழிப்படுத்துவதிலும் பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதனால், இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் அல்ஹுழைனி, அலீ இப்னு ரய்யான் போன்ற முக்கிய அறிஞர்களை இமாம் றிழாவுடன் தொடர்புபடுத்தி வைத்தார். இத்தகைய அறிமுகம், பலரை அஹ்லுல் பைத் மத்ஹபை பின்பற்ற இட்டுச் சென்றது'
மக்கள், ஹுஸைன் இப்னு ஸயீதிடமிருந்து ஹதீஸ்களை அறிந்து கொள்வார்கள். அவருடைய பணியின் மூலமாக ஞான விளக்கங்களையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இமாம் றிழாவுடன் பலரை அறிமுகமாக்கி வைத்தார். இதன் காரணமாக உண்மை இஸ்லாத்தை விளங்கிக் கொண்ட அவர்கள், மார்க்க நிலையில் பெற்று தூய இஸ்லாத்திற்கென தெளிவான சேவைகளை பரந்தளவில் மேற்கொண்டார்கள். [62]
பழ்ல் இப்னு ஷதான் அந்நைஷாபூரி
இவர் மகத்துவமிக்க ஒரு மனிதராகவும், சிறந்த வரலாற்று நோக்குனராகவும், பெரும் மார்க்க சட்டக்கலை வல்லுனராகவும், பெரும் மார்க்கச் சட்டக்கலை வல்லுனராகவும் பேச்சாளராகவும், ஆய்வாளராகவும் விளங்கினார். இமாம்களுடைய தோழர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் அவர் சேர்ந்திருந்தார். முஹம்மத் இப்னு அபீ உமைர், ஸப்வான் இப்னு யஹ்யா போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களுடன் ஐம்பது வருடங்கள் அவர் இணைந்திருந்தார். அத் தொடர்பின் மூலமாக பல்வேறு பயன்பாடுகளை அடைந்து கொண்டார். அவரே இது பற்றிக் கூறும்போது: 'ஹிஷாம் இப்னு ஹகம் வபாத்தான போது, யூனுஸ் இப்னு அப்துல் ரஹ்மான் இமாமின் பிரதிநிதியானார். யூனுஸ் வபாத்தான போது அஸ்ஸக்காக் பிரதிநிதியானார். தற்போது நான் பிரதிநிதியாக இருக்கிறேன்' [63]
மர்ஹும் ஷெய்க் தூஸி, பழ்ல் இப்னு ஷாதானை இமாம் ஹாதி, இமாம் அஸ்கரீ ஆகியோரின் தோழர்களில் ஒருவராகக் கணித்துள்ளார்.[64]
பழ்ல் இப்னு ஷாதான் சுமார் நூற்று எண்பது நூல்களை எழுதினார் அவற்றுள், தத்துவார்த்த அறிவையும், கோட்பாட்டுத் தீர்வுகளையும் முன்வைக்கும் 'அல்ஈழாஹ் மிகப் பிரபலமானதாகும். தேஹ்ரான் பல்கலைக் கழகம் ஹிஜ்ரி 1392ல் இதனை அச்சிட்டு வெளியிட்டது.
பெரும் அறிஞர்கள், பழ்லுடைய சொற்களையும் நடைமுறைகளையும் முக்கியத்துவமிக்வையாகக் கருதியுள்ளார்கள். பிற அறிவிப்பாளர்களுடைய சொற்களை ஏற்றுக் கொள்வதற்கும், நிராகரிப்பதற்கும் பழ்லுடைய கூற்றை அவ்வறிஞர்கள் ஆதாரமாகப் பயன்படுத்தினர்.
'ஜாமிஉர் ருவாத்' நூலின் ஆசிரியர் கூறுகின்றார்: 'நிச்சயமாக அவர் (பழ்ல்) அஹ்லுல்பைத் நேசர்களாகிய எமது கூட்டத்தின் தலைவராவார். எமது தோழர்கள் மார்க்க அறிஞர்களாகவும், த்ததுவ விற்பன்னர்களாகவும் இருக்கின்றனர். இந்தக் கூட்டத்திலே அவருக்கு கண்ணியம் இருக்கின்றது. அவரது ஆற்றலை பொறுத்தவரை, நாம் வர்ணிப்பதை விட அவர் மிகப் பிரபலமானவராகும். முhர்க்க அறிஞராக, தத்தவ விற்பனராக, பெரும் ஆளுமை கொண்டவராக அவர் இருக்கின்றார். பல நூல்களையும் தொகுப்புகளையும் அவர் எழுதியுள்ளார்'
பழ்ல் இப்னு ஷாதான், ஈராக்குக்குச் சென்ற போது இமாம் அஸ்கரீ அவர்களை சந்தித்தார். இமாமிடமிருந்த அவர் வெளியேற எழுந்த போது, அவரிடமிருந்து நூலொன்று விழுந்தது. அது அவர் எழுதிய நூல்களில் ஒன்றாகும். இமாம் பழ்லிடமிருந்து அதனைப் பெற்று, விரித்துப் பார்ததார்கள். அதன் சிறப்புத் தன்மைகளைப் பார்த்து வியந்த இமாம் பழ்லை பாராட்டினார்கள். மேலும், குராஸான் மக்கள் பழ்ல் இப்னு ஷாதானின் மூலம் பெருமைப்படலாம் என்றும் கூறினார்கள். [65]
பிறிதோர் அறிவிப்பில், 'இரவும் பகலும்' என்ற நூல் அதனை எழுதியவர்களுள் பழ்லும் ஒருவர்- இமாம் அஸ்கரீயிடம் அந்நூல் எடுத்துக் காண்பிக்கப்பட்ட போது, அதைப் பார்த்து வியந்த இமாம், பழ்லுக்காக மூன்று முறை இறையருள் வேண்டிப் பிரார்த்தித்ததோடு, 'அது சரியானதாகும். அதைக் கொண்டு அமல் செய்வது அவசியம்' என்றும் கூறினார்கள். [66]
பழ்லைப் பற்றி நூருல்லாஹ் அஷ்ஷுஷதரீ கூறுகின்றார்: 'பழ்ல் இப்னு ஷாதான், பெரும் தத்துவஞானி ஒருவராகவும், தப்ஸீர் மற்றும் ஹதீஸ் கலை வல்லுனர்களில் சிறப்பானவராகவும், மார்க்க சட்ட அறிஞர்கள், மற்றும் மார்க்க சட்ட வல்லுனர்களில் புகழ்பெற்றவராகவும், மொழியியலாளர்கள், இலக்கண வாதிகளில் உயர்ந்தவராகவும் இருந்தார்' [67]
பழ்ல் நைஷபூரில் வந்தார். எனினும், கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின் தாஹிர், பழ்லை அஹ்லுல்பைத் நேசர் என்ற குற்றத்தின் பெரில் அங்கிருந்து வெளியேற்றி பைஹக்குக்கு நாடு கடத்தினார்.
குராஸானில் காரிஜ்கள் கலகம் விளைவித்த போது, தன்னைப் பாதுகாத்தக் கொள்வதற்காக அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் பழ்லுக்கு ஏற்பட்டது. இவ்வாறு வெளியேறிச் செல்லும் போது வழியில் நோயுற்று வபாத்தாகி மீளாத்துயிலில் ஆழ்நதார். அவரது மரணம் இமாம் அஸ்கரீ அவர்களது காலத்திலேயே இடம்பெற்றது. பழைய நைஸாபூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது அடக்கஸ்தலம் இன்றைய நைஷாபூர் நகரை விட்டு ஒரு பர்ஸஹ் தூரத்தால் அமைந்துள்ளது.[68]
பொன்மொழிகள் சில
சங்கை மிக்க இமாம் ஹாதி அவர்களது பொன்மொழிகள் சிலவற்றை இங்கு எடுத்துக் கூறுகின்றோம்.
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி குறிப்பிட்டதாக, தமது தந்தையர் வழியாக இமாம் ஹாதி அலைஹிஸ் ஸலாம் அறிவிப்பதாவது, 'இமான் என்பது, உள்ளங்களில் உறுதியாகப் பதிந்து செயல்கள் மூலம் உறுதிப்படுத்த படுவதாகும் இஸ்லாம் வாயால் மொழிந்து நடைமுறையில் பிரதிபலிப்பதாகும்.'[69]
2.’ எவர் அதிகமாக சுயநலன் பேனுகிறாரோ அவர் மீது கோபம் கொள்பவர்கள் அதிகரிப்பார்கள்' [70]
3. 'இயலாமை, மடையர்களின் பலம் ஆகும்.'' [71]
4. 'யார் உன்மீது அன்பும் நல்லென்னமும் கொள்கிறாரோ அவரக்கு நீ வழிப்படலாம்' [72]
5. தன்நம்பிக்கையை அடக்கியவன் அதன் தீங்கில் இருந்து மீட்சி பெறுவார்.[73]
6. 'உலகம் என்பது ஒரு சந்தை சிலர் அதில் இலாபமடைகின்றனர், ஏனையோர் நஷ்டமடைகின்றனர்' ' [74]
7. 'எவர் அல்லாஹ்வை அஞ்சுகின்றாரோ, அவரைப் பார்த்து பிறர் அஞ்சுவர். எவர் அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்றாரோ அவரக்கு பிறர் வழிப்படுவர். ஒருவர் படைப்பாளனுக்கு வழிப்பட்டால், படைப்பினங்களுடைய கோபத்தை அவர் அடைந்து கொள்ளமாட்டார்.'[75]
8. 'ஓர் அநீதியாளன் இரக்கமுள்ளவனாக இருந்தால், அவனுடைய இரக்கத்தினால் அவனுடைய அநீதி மன்னிக்கப்படக் கூடும்.'[76]
9. உண்மையைப் பேணக்கூடிய ஓர் அறிவிலி, தனது அறியாமையினால் தனது உண்மையின் ஜோதியை அணைத்து விடக்கூடும்.'. [77]
அஸ்ஸியாரத்துல் ஜாமிஆ
மூஸா இப்னு அப்தில்லாஹ் கூறுகின்றார்: நான் இமாம் ஹாதியிடம் சென்று, இறைத்தூதரின் புதல்வரே! தங்களில் ஒருவரை சந்தித்தால் நான் சொல்வதற்கான பூரணமான தெளிவான வார்த்தையை எனக்குக் கற்றுத் தாருங்கள்' என வேண்டிக் கொண்டேன்.
இமாம் கூறினார்கள்: 'எமது வாயிலுக்கு நீர் வந்தால் இரண்டு ஷஹாதாக்களைக் கூறிக் கொள்வீராக. (அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அன்ன முஹம்மதன் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி) அப்துஹுவரஸுலுஹு) அதன் பிறகு பின்வரும் பிரார்த்தனையை ஓதுவீராக'
اَلسَّلامُ عَلَيْكُمْ يا اَهْلَ بَيْتِ النُّبُوَّةِ وَمَوْضِعَ الرِّسالَةِ وَمُخْتَلَفَ الْمَلاَّئِكَةِ وَمَهْبِطَ الْوَحْىِ وَمَعْدِنَ الرَّحْمَةِ وَخُزّانَ الْعِلْمِ وَمُنْتَهَى الْحِلْمِ وَاُصُولَ الْكَرَمِ وَقادَةَ الاُْمَمِ وَاَوْلِياَّءَ النِّعَمِ وَعَناصِرَ الاَْبْرارِ وَدَعاَّئِمَ الاَْخْيارِ وَساسَةَ الْعِبادِ وَاَرْكانَ الْبِلادِ وَاَبْوابَ الاْيمانِ وَاُمَناَّءَ الرَّحْمنِ وَسُلالَةَ النَّبِيّينَ وَصَفْوَةَالْمُرْسَلينَ وَعِتْرَةَ خِيَرَةِ رَبِّ الْعالَمينَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ
اَلسَّلامُ عَلى اَئِمَّةِ الْهُدى وَمَصابيحِ الدُّجى وَاَعْلامِ التُّقى وَذَوِى النُّهى وَاُولِى الْحِجى وَكَهْفِ الْوَرى وَوَرَثَةِ الاَْنْبِياَّءِ وَالْمَثَلِ الاَْعْلى وَالدَّعْوَةِ الْحُسْنى وَحُجَجِ اللَّهِ عَلى اَهْلِ الدُّنْيا وَالاْخِرَةِ وَالاُْولى وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ
اَلسَّلامُ عَلى مَحاَّلِّ مَعْرِفَةِ اللَّهِ وَمَساكِنِ بَرَكَةِ اللَّهِ وَمَعادِنِ حِكْمَةِ اللَّهِ وَحَفَظَةِ سِرِّ اللَّهِ وَحَمَلَةِ كِتابِ اللَّهِ وَاَوْصِياَّءِ نَبِىِّ اللَّهِ وَذُرِّيَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ
اَلسَّلامُ عَلَى الدُّعاةِ اِلَى اللّهِ وَالاَْدِلاَّّءِ عَلى مَرْض اتِ اللّهِ وَالْمُسْتَقِرّينَ فى اَمْرِ اللَّهِ وَالتّاَّمّينَ فى مَحَبَّةِ اللَّهِ وَالْمُخْلِصينَ فى تَوْحيدِ اللَّهِ وَالْمُظْهِرينَ لاَِمْرِ اللَّهِ وَنَهْيِهِ وَعِبادِهِ الْمُكْرَمينَ الَّذينَ لايَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهِ يَعْمَلُونَ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ
اَلسَّلامُ عَلَى الاَْئِمَّةِ الدُّعاةِ وَالْقادَةِ الْهُداةِ وَالسّادَةِ الْوُلاةِ وَالذّادَةِ الْحُماةِ وَاَهْلِ الذِّكْرِ وَاُولِى الاَْمْرِ وَبَقِيَّةِ اللَّهِ وَخِيَرَتِهِ وَحِزْبِهِ وَعَيْبَةِ عِلْمِهِ وَحُجَّتِهِ وَصِراطِهِ وَنُورِهِ وَبُرْهانِهِ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكاتُهُ
اَشْهَدُ اَنْ لا اِلهَ اِلا اللَّهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ كَما شَهِدَ اللَّهُ لِنَفْسِهِ وَشَهِدَتْ لَهُ مَلاَّئِكَتُهُ وَاُولُوا الْعِلْمِ مِنْ خَلْقِهِ لا اِل هَ اِلاّ هُوَ الْعَزِيزُ الْحَكيمُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ الْمُنْتَجَبُ وَرَسُولُهُ الْمُرْتَضى اَرْسَلَهُ بِالْهُدى وَدينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ وَاَشْهَدُ اَنَّكُمُ الاَْئِمَّةُ الرّاشِدُونَ الْمَهْدِيُّونَ الْمَعْصُومُونَ الْمُكَرَّمُونَ الْمُقَرَّبُونَ الْمُتَّقوُنَ الصّادِقُونَ الْمُصْطَفَوْنَ الْمُطيعُونَ لِلّهِ الْقَوّامُونَ بِاَمْرِهِ الْعامِلُونَ بِاِرادَتِهِ الْفاَّئِزُونَ بِكَرامَتِهِ اِصْطَفاكُمْ
بِعِلْمِهِ وَارْتَضاكُمْ لِغَيْبِهِ وَاخْتارَكُمْ لِسِرِّهِ وَاجْتَبيكُمْ بِقُدْرَتِهِ وَاَعَزَّكُمْ بِهُداهُ وَخَصَّكُمْ بِبُرْهانِهِ وَانْتَجَبَكُمْ لِنُورِهِ وَاَيَّدَكُمْ بِرُوحِهِ وَرَضِيَكُمْ خُلَفاَّءَ فى اَرْضِهِ وَحُجَجاً عَلى بَرِيَّتِهِ وَاَنْصاراً لِدينِهِ وَ حَفَظَةً لِسِرِّهِ وَخَزَنَةً لِعِلْمِهِ وَمُسْتَوْدَعاً لِحِكْمَتِهِ وَتَراجِمَةً لِوَحْيِهِ وَاَرْكاناً لِتَوْحيدِهِ وَشُهَداَّءَ عَلى خَلْقِهِ وَاَعْلاماً لِعِبادِهِ وَمَناراً فى بِلادِهِ وَاَدِلاَّّءَ عَلى صِر اطِهِ عَصَمَكُمُ اللَّهُ مِنَ الزَّلَلِ وَآمَنَكُمْ مِنَالْفِتَنِ وَطَهَّرَكُمْ مِنَ الدَّنَسِ وَاَذْهَبَ عَنْكُمُ الرِّجْسَ وَطَهَّرَكُمْ تَطْهيراً
فَعَظَّمْتُمْ جَلالَهُ وَاَكْبَرْتُمْ شَاءْنَهُ وَمَجَّدْتُمْ كَرَمَهُ وَاَدَمْتُمْ ذِكْرَهُ وَوَكَّدْتُمْ ميثاقَهُ وَاَحْكَمْتُمْ عَقْدَ طاعَتِهِ وَنَصَحْتُمْ لَهُ فِى السِّرِّ وَالْعَلانِيَةِ وَدَعَوْتُمْ اِلى سَبيلِهِ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَبَذَلْتُمْ اَنْفُسَكُمْ فى مَرْضاتِهِ وَصَبَرْتُمْ عَلى ما اَصابَكُمْ فى جَنْبِهِ وَاَقَمْتُمُ الصَّلوةَ وَآتَيْتُمُ الزَّكاةَ وَاَمَرْتُمْ بِالْمَعْرُوفِ وَنَهَيْتُمْ عَنِ الْمُنْكَرِ وَجاهَدْتُمْ فِى اللَّهِ حَقَّ جِهادِهِ حَتّى اَعْلَنْتُمْ دَعْوَتَهُ وَبَيَّنْتُمْ فَراَّئِضَهُ وَاَقَمْتُمْ حُدُودَهُ وَنَشَرْتُمْ شَرايِعَ اَحْكامِهِ وَسَنَنْتُمْ سُنَّتَهُ وَصِرْتُمْ فى ذلِكَ مِنْهُ اِلَى الرِّضا وَسَلَّمْتُمْ لَهُ الْقَضاَّءَ وَصَدَّقْتُمْ مِنْ رُسُلِهِ مَنْ مَضى
فَالرّاغِبُ عَنْكُمْ مارِقٌ وَاللاّزِمُ لَكُمْ لاحِقٌ وَالْمُقَصِّرُ فى حَقِّكُمْ زاهِقٌ وَالْحَقُّ مَعَكُمْ وَفيكُمْ وَمِنْكُمْ وَاِلَيْكُمْ وَاَنْتُمْ اَهْلُهُ وَمَعْدِنُهُ وَميراثُ النُّبُوَّةِ عِنْدَكُمْ وَاِيابُ الْخَلْقِ اِلَيْكُمْ وَحِسابُهُمْ عَلَيْكُمْ وَفَصْلُ الْخِطابِ عِنْدَكُمْ وَآياتُ اللَّهِ لَدَيْكُمْ وَعَزآئِمُهُ فيكُمْ وَنُورُهُ وَبُرْهانُهُ عِنْدَكُمْ وَاَمْرُهُ اِلَيْكُمْ مَنْ والاكُمْ فَقَدْ والَى اللَّهَ وَمَنْ عاداكُمْ فَقَدْ عادَ اللَّهَ وَ مَنْ اَحَبَّكُمْ فَقَدْاَحَبَّاللَّهَ وَمَنْ اَبْغَضَكُمْ فَقَدْ اَبْغَضَ اللَّهَ وَمَنِ اعْتَصَمَ بِكُمْ فَقَدِ اعْتَصَمَ بِاللَّهِ اَنْتُمُ [السَّبيلُ الاْعْظَمُ و] الصِّراطُ الاَْقْوَمُ وَشُهَداَّءُ دارِ الْفَناَّءِ وَشُفَعاَّءُ دارِ الْبَقاَّءِ وَالرَّحْمَةُ الْمَوْصُولَةُ وَالاْيَةُ الَْمخْزُونَةُ وَالاَْمانَةُ الْمُحْفُوظَةُ وَالْبابُ الْمُبْتَلى بِهِ النّاسُ مَنْ اَتيكُمْ نَجى وَمَنْ لَمْ يَاْتِكُمْ هَلَكَ اِلَى اللَّهِ تَدْعُونَ وَعَلَيْهِ تَدُلُّونَ وَبِهِ تُؤْمِنُونَ وَلَهُ تُسَلِّمُونَ وَبِاَمْرِهِ تَعْمَلُونَ وَاِلى سَبيلِهِ تُرْشِدُونَ وَبِقَوْلِهِ تَحْكُمُونَ سَعَدَ مَنْ والاكُمْ وَهَلَكَ مَنْ عاداكُمْ وَخابَ مَنْ جَحَدَكُمْ وَضَلَّ مَنْ فارَقَكُمْ وَفازَ مَنْ تَمَسَّكَ بِكُمْ وَاَمِنَ مَنْ لَجَاَ اِلَيْكُمْ وَسَلِمَ مَنْ صَدَّقَكُمْ وَهُدِىَ مَنِ اعْتَصَمَ بِكُمْ مَنِ اتَّبَعَكُمْ فَالْجَنَّةُ مَاْويهُ وَمَنْ خالَفَكُمْ فَالنّارُ مَثْويهُ وَمَنْ جَحَدَكُمْ كافِرٌ وَمَنْ حارَبَكُمْ مُشْرِكٌ وَمَنْ رَدَّ عَلَيْكُمْ فى اَسْفَلِ دَرَكٍ مِنَ الْجَحيمِ اَشْهَدُ اَنَّ هذا سابِقٌ لَكُمْ فيما مَضى وَجارٍ لَكُمْ فيما بَقِىَ وَاَنَّ اَرْواحَكُمْ وَنُورَكُمْ وَطينَتَكُمْ واحِدَةٌ طابَتْ وَطَهُرَتْ بَعْضُها مِنْ بَعْضٍ خَلَقَكُمُ اللَّهُ اَنْواراً فَجَعَلَكُمْ بِعَرْشِهِ مُحْدِقينَ حَتّى مَنَّ عَلَيْنا بِكُمْ فَجَعَلَكُمْ فى بُيُوتٍ اَذِنَ اللَّهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فيهَا اسْمُهُ وَجَعَلَ صَلَواتَنا عَلَيْكُمْ وَما خَصَّنا بِهِ مِنْ وِلايَتِكُمْ طيباً لِخَُلْقِنا وَطَهارَةً لاَِنْفُسِنا وَتَزْكِيَةً لَنا وَكَفّارَةً لِذُنُوبِنا فَكُنّا عِنْدَهُ مُسَلِّمينَ بِفَضْلِكُمْ وَمَعْرُوفينَ بِتَصْديقِنا اِيّاكُمْ فَبَلَغَ اللَّهُ بِكُمْ اَشْرَفَ مَحَلِّ الْمُكَرَّمينَ وَاَعْلى مَنازِلِ الْمُقَرَّبينَ وَاَرْفَعَ دَرَجاتِ الْمُرْسَلينَ حَيْثُ لا يَلْحَقُهُ لاحِقٌ وَلا يَفُوقُهُ فاَّئِقٌ وَلا يَسْبِقُهُ سابِقٌ وَلا يَطْمَعُ فى اِدْراكِهِ طامِعٌ حَتّى لا يَبْقى مَلَكٌ مُقَرَّبٌ وَلا نَبِىُّ مُرْسَلٌ وَلا صِدّيقٌ وَلا شَهيدٌ وَلا عالِمٌ وَلا جاهِلٌ وَلا دَنِىُّ وَلا فاضِلٌ وَلا مُؤْمِنٌ صالِحٌ وَلا فِاجِرٌ طالِحٌ وَلاجَبّارٌ عَنيدٌ وَلا شَيْطانٌ مَريدٌ وَلا خَلْقٌ فيما بَيْنَ ذلِكَ شَهيدٌ اِلاّ عَرَّفَهُمْ جَلالَةَ اَمْرِكُمْ وَعِظَمَ خَطَرِكُمْ وَكِبَرَ شَاْنِكُمْ وَتَمامَ نُورِكُمْ وَصِدْقَ مَقاعِدِكُمْ وَثَباتَ مَقامِكُمْ وَشَرَفَ مَحَلِّكُمْ وَمَنْزِلَتِكُمْ عِنْدَهُ وَكَرامَتَكُمْ عَلَيْهِ وَخاصَّتَكُمْ لَدَيْهِ وَقُرْبَ مَنْزِلَتِكُمْ مِنْهُ بِاَبى اَنْتُمْ وَاُمّى وَاَهْلى وَمالى وَاُسْرَتى اُشْهِدُ اللَّهَ وَاُشْهِدُكُمْ اَنّى مُؤْمِنٌ بِكُمْ وَبِما آمَنْتُمْ بِهِ كافِرٌ بَعَدُوِّكُمْ وَبِما كَفَرْتُمْ بِهِ مُسْتَبْصِرٌ بِشَاْنِكُمْ وَبِضَلالَةِ مَنْ خالَفَكُمْ مُوالٍ لَكُمْ وَلاَِوْلِياَّئِكُمْ مُبْغِضٌ لاَِعْداَّئِكُمْ وَمُعادٍ لَهُمْ سِلْمٌ لِمَنْ سالَمَكُمْ وَحَرْبٌ لِمَنْ حارَبَكُمْمُحَقِّقٌ لِما حَقَّقْتُمْ مُبْطِلٌ لِما اَبْطَلْتُمْ مُطيعٌ لَكُمْ عارِفٌ بِحَقِّكُمْ مُقِرُّ بِفَضْلِكُمْ مُحْتَمِلٌ لِعِلْمِكُمْ مُحْتَجِبٌ بِذِمَّتِكُمْ مُعْتَرِفٌ بِكُمْمُؤْمِنٌ بِاِيابِكُمْ مُصَدِّقٌ بِرَجْعَتِكُمْ مُنْتَظِرٌ لاَِمْرِكُمْ مُرْتَقِبٌ لِدَوْلَتِكُمْ آخِذٌبِقَوْلِكُمْ عامِلٌ بِاَمْرِكُمْ مُسْتَجيرٌ بِكُمْ زاَّئِرٌ لَكُمْ لاَّئِذٌ ع اَّئِذٌ بِقُبُورِكُمْ مُسْتَشْفِعٌ اِلَى اللَّهِ عَزَّوَجَلَّ بِكُمْ وَمُتَقَرِّبٌ بِكُمْ اِلَيْهِ وَمُقَدِّمُكُمْ اَمامَ طَلِبَتى وَحَواَّئِجى وَاِرادَتى فى كُلِّ اَحْوالى وَاُمُورى مُؤْمِنٌ بِسِرِّكُمْ وَعَلانِيَتِكُمْ وَشاهِدِكُمْ وَغاَّئِبِكُمْ وَاَوَّلِكُمْ وَآخِرِكُمْ وَمُفَوِّضٌ فى ذلِكَ كُلِّهِ اِلَيْكُمْ وَمُسَلِّمٌ فيهِ مَعَكُمْ وَقَلْبى لَكُمْ مُسَلِّمٌ وَرَاْيى لَكُمْ تَبَعٌ وَنُصْرَتى لَكُمْ مُعَدَّةٌ حَتّى يُحْيِىَ اللَّهُ تَعالى دينَهُ بِكُمْ وَيَرُدَّكُمْ فى اَيّامِهِ وَيُظْهِرَكُمْ لِعَدْلِهِ وَيُمَكِّنَكُمْ فى اَرْضِهِ
فَمَعَكُمْ مَعَكُمْ لامَعَ غَيْرِكُمْ آمَنْتُ بِكُمْ وَتَوَلَّيْتُ آخِرَكُمْ بِما تَوَلَّيْتُ بِهِ اَوَّلَكُمْ وَبَرِئْتُ اِلَى اللَّهِ عَزَّوَجَلَّ مِنْ اَعْداَّئِكُمْ وَمِنَ الْجِبْتِ وَالطّاغُوتِ وَالشَّياطينِ وَحِزْبِهِمُ الظّالِمينَ لَكُمْ وَالْجاحِدينَلِحَقِّكُمْ وَالْمارِقينَ مِنْ وِلايَتِكُمْ وَالْغاصِبينَ لاِِرْثِكُمْ وَالشّاَّكّينَ فيكُمْ وَالْمُنْحَرِفينَ عَنْكُمْ وَمِنْ كُلِّ وَليجَةٍ دُونَكُمْ وَكُلِّ مُطاعٍ سِواكُمْ وَمِنَ الاَْئِمَّةِ الَّذينَ يَدْعُونَ اِلَى النّارِ فَثَبَّتَنِىَ اللَّهُ اَبَداً ما حَييتُ عَلى مُوالاتِكُمْ وَمَحَبَّتِكُمْ وَدينِكُمْ وَوَفَّقَنى لِطاعَتِكُمْ وَرَزَقَنى شَفاعَتَكُمْ وَجَعَلَنى مِنْ خِيارِ مَواليكُمُ التّابِعينَ لِما دَعَوْتُمْ اِلَيْهِ وَ جَعَلَنى مِمَّنْ يَقْتَصُّ آثارَكُمْ وَيَسْلُكُ سَبيلَكُمْ وَيَهْتَدى بِهُديكُمْ وَيُحْشَرُ فى زُمْرَتِكُمْ وَيَكِرُّ فى رَجْعَتِكُمْ وَيُمَلَّكُ فى دَوْلَتِكُمْ وَ يُشَرَّفُ فى عافِيَتِكُمْ وَيُمَكَّنُ فى اَيّامِكُمْ وَتَقِرُّ عَيْنُهُ غَداً بِرُؤْيَتِكُمْ
بِاَبى اَنْتُمْ وَاُمّى وَنَفْسى وَاَهْلى وَمالى مَنْ اَرادَ اللَّهَ بَدَءَ بِكُمْ وَمَنْ وَحَّدَهُ قَبِلَ عَنْكُمْ وَمَنْ قَصَدَهُ تَوَجَّهَ بِكُمْ مَوالِىَّ لاَّ اُحْصى ثَن اَّئَكُمْ وَلا اَبْلُغُ مِنَ الْمَدْحِ كُنْهَكُمْ وَمِنَ الْوَصْفِ قَدْرَكُمْ وَاَنْتُمْ نُورُ الاَْخْيارِ وَهُداةُ الاَْبْرارِ وَحُجَجُ الْجَبّارِبِكُمْ فَتَحَ اللَّهُ وَبِكُمْ يَخْتِمُ وَبِكُمْ يُنَزِّلُ الْغَيْثَ وَبِكُمْ يُمْسِكُ السَّماَّءَ اَنْ تَقَعَ عَلَى الاَْرْضِ اِلاّ بِاِذْنِهِ وَبِكُمْ يُنَفِّسُ الْهَمَّ وَيَكْشِفُ الضُّرَّ وَعِنْدَكُمْ ما نَزَلَتْ بِهِ رُسُلُهُ وَهَبَطَتْ بِهِ مَلاَّئِكَتُهُ وَاِلى جَدِّكُمْ وَاِلى اَخيكَ بُعِثَ الرُّوحُ الاَْمينُ آتاكُمُ اللَّهُ ما لَمْ يُؤْتِ اَحَداً مِنَالْعالَمينَ طَاْطَاَ كُلُّ شَريفٍ لِشَرَفِكُمْ وَبَخَعَ كُلُّ مُتَكَبِّرٍ لِطاعَتِكُمْ وَخَضَعَ كُلُّ جَبّارٍ لِفَضْلِكُمْ وَذَلَّ كُلُّشَىْءٍ لَكُمْ وَاَشْرَقَتِ الاَْرْضُ بِنُورِكُمْ وَفازَ الْفاَّئِزُونَ بِوِلايَتِكُمْ بِكُمْ يُسْلَكُ اِلَى الرِّضْوانِ وَعَلى مَنْ جَحَدَ وِلايَتَكُمْ غَضَبُ الرَّحْمنِ
بِاَبى اَنْتُمْ وَاُمّى وَنَفسى وَاَهْلى وَمالى ذِكْرُكُمْ فِى الذّاكِرينَ وَاَسْماَّؤُكُمْ فِى الاَْسْماَّءِ وَاَجْسادُكُمْ فِى الاَْجْسادِ وَاَرْواحُكُمْ فِى اْلاَرْواحِ وَاَنْفُسُكُمْ فِى النُّفُوسِ وَآثارُكُمْ فِى الاْثارِ وَقُبُورُكُمْ فِى الْقُبُورِ فَما اَحْلى اَسْماَّئَكُمْ وَاَكْرَمَ اَنْفُسَكُمْ وَاَعْظَمَ شَاْنَكُمْ وَاَجَلَّ خَطَرَكُمْ وَاَوْفى عَهْدَكُمْ وَاَصْدَقَ وَعْدَكُمْ كَلامُكُمْ نُورٌ وَاَمْرُكُمْ رُشْدٌ وَوَصِيَّتُكُمُ التَّقْوى وَفِعْلُكُمُ الْخَيْرُ وَعادَتُكُمُ الاِْحْسانُ وَسَجِيَّتُكُمُ الْكَرَمُ وَشَاْنُكُمُ الْحَقُّ وَالصِّدْقُ وَالرِّفْقُ وَقَوْلُكُمْ حُكْمٌ وَحَتْمٌ وَرَاْيُكُمْ عِلْمٌ وَحِلْمٌ وَحَزْمٌ اِنْ ذُكِرَ الْخَيْرُ كُنْتُمْ اَوَّلَهُ وَاَصْلَهُ وَفَرْعَهُ وَمَعْدِنَهُ وَمَاْويهُ وَمُنْتَهاهُ
بِاَبى اَنْتُمْ وَاُمّى وَنَفْسى كَيْفَ اَصِفُ حُسْنَ ثَناَّئِكُمْ وَاُحْصى جَميلَ بَلاَّئِكُمْ وَبِكُمْ اَخْرَجَنَا اللَّهُ مِنَ الذُّلِّ وَفَرَّجَ عَنّا غَمَراتِ الْكُرُوبِ وَاَنْقَذَنا مِنْ شَفا جُرُفِ الْهَلَكاتِ وَمِنَ النّارِ بِاَبى اَنْتُمْ وَاُمّى وَنَفْسى بِمُوالاتِكُمْ عَلَّمَنَا اللَّهُ مَعالِمَ دِينِنا وَاَصْلَحَ ماكانَ فَسَدَ مِنْ دُنْيانا وَبِمُوالاتِكُمْ تَمَّتِ الْكَلِمَةُ وَعَظُمَتِ النِّعْمَةُ وَائْتَلَفَتِ الْفُرْقَةُ وَبِمُوالاتِكُمْ تُقْبَلُ الطّاعَةُ الْمُفْتَرَضَةُ وَلَكُمُ الْمَوَدَّةُ الْواجِبَةُ وَالدَّرَجاتُ الرَّفيعَةُ وَالْمَقامُ الْمَحْمُودُ وَالْمَكانُ الْمَعْلُومُ عِنْدَ اللَّهِ عَزَّوَجَلَّ وَالْجاهُ الْعَظيمُ وَالشَّاْنُ الْكَبيرُ وَالشَّفاعَةُ الْمَقْبُولَةُ رَبَّنا آمَنّا بِما اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنا مَعَ الشّاهِدينَ رَبَّنا لا تُزِغْ قُلُوبَنا بَعْدَ اِذْ هَدَيْتَنا وَهَبْ لَنا مِنْ لَدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهّابُ سُبْحانَ رَبِّنا اِنْ كانَ وَعْدُ رَبِّنا لَمَفْعُولاً
يا وَلِىَّ اللَّهِ اِنَّ بَيْنى وَبيْنَ اللَّهِ عَزَّ وَ جَلَّ ذُنُوباً لا يَاْتى عَلَيْها اِلاّ رِضاكُمْ فَبِحَقِّ مَنِ ائْتَمَنَكُمْ عَلى سِرِّهِ وَاسْتَرْعاكُمْ اَمْرَ خَلْقِهِ وَقَرَنَ طاعَتَكُمْ بِطاعَتِهِ لَمَّا اسْتَوْهَبْتُمْ ذُنُوبى وَكُنْتُمْ شُفَعاَّئى فَاِنّى لَكُمْ مُطيعٌ مَنْ اَطاعَكُمْ فَقَدْ اَطاعَ اللَّهَ وَمَنْ عَصاكُمْ فَقَدْ عَصَى اللَّهَ وَمَنْ اَحَبَّكُمْ فَقَدْ اَحَبَّ اللَّهَ وَمَنْ اَبْغَضَكُمْ فَقَدْ اَبْغَضَ اللَّهَ
اَللّهُمَّ اِنّى لَوْ وَجَدْتُ شُفَعاَّءَ اَقْرَبَ اِلَيْكَ مِنْ مُحَمِّدٍ وَاَهْلِ بَيْتِهِ الاَْخْيارِ الاَْئِمَّةِ الاَْبْرارِ لَجَعَلْتُهُمْ شُفَعاَّئى فَبِحَقِّهِمُ الَّذى اَوْجَبْتَ لَهُمْ عَلَيْكَ اَسْئَلُكَ اَنْ تُدْخِلَنى فى جُمْلَةِ الْعارِفينَ بِهِمْ وَبِحَقِّهِمْ وَفى زُمْرَةِ الْمَرْحُومينَ بِشَفاعَتِهِمْ اِنَّكَ اَرْحَمُ الرّاحِمينَ وَصَلَّى اللَّهُ عَلى مُحَمَّدٍ وَآلِهِ الطّاهِرينَ وَسَلَّمَ تَسْليماً كَثيراً وَحَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكيلُ
சியாரா ஜாமிஆவின் சுருக்கம்
'நபியின் அஹ்லுல் பைத்தினரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக. நீங்கள், ரிஸாலத்தின் புனிதஸ்தலமாக, மலக்குகள் வந்து போகும் இடமாக வஹியின் இறங்குதளமாக, அருளின் ஊற்றாக, அறிவின் பொக்கிஷமாக, அன்பின் உச்சஸ்தானமாக, சங்கையின் அடித்தளமாக, சமூகத்தின் தலைமைத்துவமாக, அருட்கொடைகளின் பாதுகாவலர்களாக, நல்லடியார்களின் மூலவேர்களாக, நன்மைகளின் அழைப்பாளர்களாக, அடியார்களின் வழிகாட்டிகளாக, நாடுகளின் தூண்களாக, நம்பிக்கையின் வாயில்களாக, ரஹ்மானின் நம்பிக்கையாளர்களாக, நபிமார்களின் பரம்பரையினராக, ரஸுல்மார்களின் தெளிவுகளாக, அகில உலக இரட்சகனின் தெரிவு செய்யப்பட்ட குடும்பமாக இருக்கின்றீர்கள். ஊங்கள் மீது அவனது அருளும் செழிப்பும் உண்டாவதாக.
'நேர்வழியின் இமாம்கள் மீது ஸலாம் உண்டாவதாக. ஆவர்கள், அடரிருளின் ஒளிவிளக்குகளாக, இறையச்சத்தின் அடையாளங்களாக, செழிப்பின் உரித்தாளர்களாக, சங்கையில் உயர்வானவர்களாக, இரகசியம் அறிந்தவர்களாக, நபிமார்களின் வாரிசுகளாக, மிகைத்த இறைநேசர்களாக, அழகிய மார்க்க அழைப்பாளர்களாக, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளாக, சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளும் செழிப்புப் உண்டாவதாக.
'அல்லாஹ்வை அறிந்த ஞானிகள், அல்லாஹ்வினது செழிப்பான குடியிருப்பாளர்கள், அல்லாஹ்வினது ஞானத்தின் பொக்கிஷங்கள், அல்லாஹ்வினது அரகசியத்தின் பாதுகாவலர்கள், அல்லாஹ்வினது இரகசியத்தின் பாதுகாவலர்கள், அல்லாஹ்வினது வேதத்தை சுமந்தவர்கள், இறைதூதரது பிரதிநிதிகள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களது பரம்பரையினர் ஆகயோர் மீது அல்லாஹ்வினது ஸலாமும், அருளும் செழிப்பும் உண்டாவதாக.
'அலலாஹ்வின் பாலான அழைப்பாளர்கள், அல்லாஹ்வினது திருப்பொருத்தத்தினது அறிவிப்பாளர்கள், அல்லாஹ்வுடைய கட்டளைகளில் நிலைத்திருப்பவர்கள், அல்லாஹ்வினது அன்பைப் பூரணமாகப் பெற்றுக் கொண்டவர்கள், அல்லாஹ்வினது ஏகத்துவத்தை தூய்மையாக ஏற்றுக் கொண்டவர்கள், அல்லாஹ்வினது ஏவல்களையும்
விலக்கல்களையும் ஒழுகுபவர்கள், ஒரு நல்ல விடயத்தை தாம் செய்கின்ற வரை பிறருக்கு அதனை ஏவாத சங்கையான அல்லாஹ்வின் நல்லடியார்கள் ஆகியோர் மீது அல்லாஹ்வின் ஸலாமும் அருளும் செழிப்பும் உண்டாவதாக.
'ஏகத்துவ அழைப்பாளர்களான இமாம்கள், நேர்வழி நடக்கும் தலைவர்கள், நேர்மையான முன்னோடிகள், கற்பொழுக்கமுள்ளவர்கள், இறைநினைவில் திளைப்பவர்கள், முஸ்லிம்களின் நிர்வாகப் பொறுப்பாளர்கள், அல்லாஹ்வின் நேசர்கள், அவனது நல்லடியார்கள், அவனது கூட்டத்தினர், பாதை, அவனது ஒளி, அவனது சான்று அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாமும் அருளும் செழிப்பும் உண்டாவதாக.
'அல்லாஹ்வின் அவனது மலக்குகளும், அவனது படைப்பினங்களில் அறிவுடையோரும் எவ்வாறு அல்லாஹ்வைப் பற்றி சாட்சி கூறினார்களோ, அவ்வாறே நானும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய இறைவன் வேறு யாருமில்லையென்றும் அவன் தனித்தவன் என்றும், அவன் அணைதுணையற்றவன் என்றும் சாட்சி கூறுகின்றேன். ஆவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஆவன் கண்ணியமானவனும் மதிநுட்பமுள்ளவனுமாவான். மேலும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வினது தெரிவு செய்யப்பட்ட அடியாரும் அவனால் திருப்தி காணப்பட்ட தூதரும் ஆவார். அல்லாஹ் ஏனைய பிழையான மார்க்கங்களுக்கு பதிலீடாக, அவரை, நேர்வழி, உண்மை மார்க்கம் என்பவற்றுடன் அனுப்பி, முஷ்ரிகீன்னளின் வெறுப்புக்கு மத்தியிலும் அவற்றை நிலைநாட்டச் செய்தான்.
'நிச்சயமாக அல்லுல்பைத்தினராகிய நீங்கள், நேர்வழி பெற்றவர்களாக, வழிகாட்டிகளாக, பரிசுத்தமானவர்களாக, சங்கைமிக்கவர்களாக, அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக, இறையச்சமுள்ளவர்களாக, உண்மையாளர்களாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அல்லாஹ்வுக்கு வழிப்படுபவர்களாக, அவனது கட்டளைகளை நிலைநாட்டுபவர்களாக, அவனது விருப்பங்களை மேற்கொள்பவர்களாக, அவனது அற்புதங்களினால் வெற்றி பெறுபவர்களாக, இமாம்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்,
தனது எல்லையற்ற விசாலமிக்க அறிவினால் உங்களைத் தேர்வு செய்தான், அவனது மறைவான விடயங்களுக்கென உங்களைப் பொருந்திக் கொண்டான், அவனது இரகசியங்களுக்கென உங்களைத் தெரிந்தெடுத்தான், அவனது வல்லமையினால் பரிசுத்தப்படுத்தினான், அவனது நேர்வழியினால் உங்களை கண்ணியப்படுத்தினான, அவனது சான்றுகளினால் உங்களை தனித்துவமாக்கினான், அவனது ஒளியினால் உங்களை மிளிரச் செய்தான், அவனது ஆன்மாவினால் உங்களை உறுதிப்படுத்தினான், பூமியிலே, தன் பிரதிநிதியாக, தனது இருப்பின் அத்தாட்சிகளாக, தனது மார்க்கத்துக்கான உதவியாளர்களாக, தனது இரகசியங்களின் பாதுகாவலர்களாக, தனது அறிவின் களஞ்சியங்களாக, தனது ஞானத்தின் வெளிப்பாடுகளாக, தனது அறிவிப்பின் மொழிபெயர்ப்பாளர்களாக, தனது ஏகத்துவத்தின் தூண்களாக, தனது படைப்பின் சாட்சியாளர்களாக, தனது அடியார்களின் ஊடகங்களாக, தனது உள்ளமையின் விளக்குகளாக, தனது நடைமுறைப் பாதையின் வழிகாட்டிகளாக அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொண்டுள்ளான். ஆல்லாஹ் உங்களைப் திடுக்கங்களிலிருந்து பாதுகாத்துள்ளான், குழப்பங்களிலிருந்து அபயமளித்துள்ளான், அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்தியுள்ளான், குற்றச் செயல்களை உங்களை விட்டும் நீக்கியுள்ளான், உங்களை பரிபூரணமாக சுத்தப்படுத்தியுள்ளான்.

'நீங்கள், அல்லாஹ்வினது கண்ணியத்தை மகத்துவப்படுத்தினீர்கள், அவனது விடயங்களை பெருமைப்படுத்தினீர்கள், அவனது கொடையை சங்கை செய்தீர்கள், அவனது நினைவுகளை நிலைப்படுத்திக் கொண்டீர்கள், அவனது இருப்பை உறுதிப்படுத்தினீர்கள், அவனுக்கு வழிப்படுவதற்கான உடன்படிக்கையை சட்டமாக்கினீர்கள், இரகசியத்திலும் பரகசியத்திலும் அவனைப் பற்றி உபதேசித்தீர்கள், அழகிய உபதேசங்களை, ஞானக் கருத்துகளூடாக அவன் பால் மக்களுக்கு அழைப்பு விடுத்தீர்கள், அவனது திருப்பொருத்தத்தை அடைவதில் உங்களது ஆன்மாவை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டீர்கள், அவனிலிருந்து உங்களைப் பீடித்தவற்றுக்கென பொறுமை செய்தீர்கள், தொழுகையை நிலைநாட்டினீர்கள், ஸக்காத்தை நிறைவேற்றினீர்கள் நன்மையை ஏவி தீமையை விலக்கினீர்கள், அல்லாஹ்வினது அழைப்பை பகிரங்கப்படுத்துவதற்காக உண்மையான ஜிஹாதில் ஈடுபட்டீர்கள், அவனது கட்டளைகளை தெளிவுபடுத்தினீர்கள்,
அவனது விதிமுறைகளை நிலைநாட்டினீர்கள், அவனது சட்டங்களின் மார்க்கவியலை பரவச் செய்தீர்கள், அவனது வழிமுறைகளைக் கடைப்பிடித்தீர்கள், இவற்றின் மூலம் அவனது திருப்திக்குரியவர்களாக மாறினீர்கள், அவனது ஏற்பாடுகளை உவந்து, அவனது தூதர்களையும் உண்மைப்படுத்தினீர்கள்.
'உங்களை வெறுப்பவன் தீயவன் உங்களை சிரமத்திற்குள்ளாக்குபவன் கெட்டவன். ஊங்களது உரிமைகளைப் பறிப்பவன் பாவி. உண்மை என்பது, உங்களுடன், உங்களிலே, உங்களின் புறத்தே, உங்களின் பாலே உள்ளது. நீங்கள்தான் உண்மை உடையோர்களாக, அதன் ஊற்று நிலங்களாக இருக்கின்றீர்கள். நபித்துவத்தின் வாரிசுரிமை உங்களிடமுள்ளது. புடைப்பினங்களின் தேவையாதல் உங்களின் பாலானது. அவர்களின் கேள்வி கணக்கு உங்கள் மீதுள்ளது. பேச்சின் தெளிவு உங்களிடமுள்ளது. ஆல்லாஹ்வின் வசனங்கள் உங்களைச் சேர்ந்துள்ளன. அவனத உறுதியுரைகள் உங்களிலேயுள்ளன. அவனது ஒளி, அவனது அத்தாட்சி உங்களிடத்திலுள்ளன. அவனது விடயங்களும் உங்களின் பாலானதாகும். ஏவர் உங்களை ஏற்றுக் கொண்டாரோ அவரை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். ஏவர் உங்களைப் பகைமை பாராட்டுகின்றாரோ அவரை அல்லாஹ் பகைமை பாராட்டுகின்றான். ஏவர் உங்களை நேசிக்கின்றாரோ அவரை அல்லாஹ் நேசிக்கின்றான். ஏவர் உங்களைக் கோபிக்கின்றாரோ அவரை அல்லாஹ் கோபிக்கின்றான். ஏவர் உங்களின் மூலம் பாதுகாப்புத் தேடுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மூலம் பாதுகாப்புப் பெறுகின்றார்.
'நீங்கள்தான் தெளிவான நேர்வழி, இவ்வுலகின் சாட்சியாளர்கள், மறுமையின் பரிந்துரைப்பாளர்கள், தொடர்ச்சியான அருள், சேகரிக்கப்பட்ட அத்தாட்சி, பாதுகாக்கப்பட்ட அமானிதம், மனிதர்கள் ஈடேற்றம் பெறும் தலைவாயில். ஏவர் உங்களிடம் வருகின்றாரோ அவர் வெற்றி பெறுவார், எவர் உங்களைப் புறக்கணிக்கின்றாரோ அவர் நாசம் பெறுவார் நீங்கள் அல்லாஹ்வின் பால் அழைப்பு விடுக்கின்றீர்கள், அவனைப் பற்றி அறிவிக்கின்றீர்கள், அவனை விசுவாசம் கொள்கின்றீர்கள், அவனுக்கே அடிபணிகின்றீர்கள், அவனது ஏவல்களை அமுல்படுத்துகின்றீர்கள், அவனது நேர்வழியைக் காண்பிக்கின்றீர்கள், அவனது சொல்லின் மூலம் தீர்ப்பளிக்கின்றீர்கள். உங்களைத் தலைவராகக் கொண்டவன் சீதேவியாவான், உங்களைப்.

பகையாக நோக்கியவன் அழிந்து விடுவான், உங்களை நிராகரித்தவன் நாசம் பெறுவான், உங்களைப் பிரிந்து நடப்பவன் வழிகெடுவான், உங்களைப் பின்பற்றியொழுகுபவன் ஜெயம் பெறுவாதன், உங்களிடம் தஞ்சம் கோரியவன் அபயமளிக்கப்படுவான், உங்களை உண்மைப்படுத்தியவன் சாந்நி பெறுவான், உங்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடியவன் நேர்வழி பெறுவான். யுhர் உங்களை பின்பற்றுகின்றானோ அவனது தங்குமிடம் சுவர்க்கமாகும், யார் உங்களுக்கு முரண்படுகின்றானோ அவனது தங்குமிடம் நரகமாகும், யார் உங்களை நிராகரிக்கின்றானோ அவன் காபிராகும், யார் உங்களுடன் போர் புரிகின்றானோ அவன் இணைவைப்பாளணாகும், யார் உங்களை எதிர்க்கின்றானோ அவன் நரகின் மிகக் கீழ்த்தளத்தில் போடப்படுவான்.
நிச்சயமாக இது உங்களின் முந்நியவர்களுக்கு இருந்தது. பின்னால் எஞ்சியிருப்பவர்களுக்கும் இருக்கிறது. ஊங்களது ஆன்மாவும் ஒளியும் இயல்பும் பரிசுத்தமானதாகவும் நல்லதாவும் இருக்கும். ஆல்லாஹ் உங்களை ஒளியாகப் படைத்துள்ளான். உங்களையிட்டு நாம் பெருமைப்படும் வண்ணம் அல்லாஹ் தனது அர்ஷின் மூலம் உங்களை தனக்கு நெருக்கமானவர்களாக ஆக்கியுள்ளான். தனது பெயர் கூறப்படும் புனிதமான இல்லத்தில் அல்லாஹ் உங்களை ஒன்றிணைத்துள்ளான். உங்கள் மீதான எங்களது ஸலவாதையும், உங்களது பிரதிநிதித்துவத் தன்மையில் விசேடமானவற்றையும் எமது படைப்பின் சிறப்பாக, எமது ஆன்மாவின் பரிசுத்தமாக, எம்மைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக, எமது பாவங்களுக்கான பரிகாரமாக ஆக்கியுள்ளான். அவனிடத்திலே, உங்களது சிறப்பை ஒப்புவிப்பவர்களாகவும் உங்களை நாம் உண்மைப்படத்துவதை அறிந்தவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம். சுங்கைப்படுத்துவோரின் மிகச் சிறந்த ஸ்தானத்தையும் நெருக்கமானவர்களின் மிக உயர்ந்த தளத்தையும் ரசூல்மார்களின் மேத்திய அந்தஸ்தையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கினான். அத்தகைய நிலையை மற்றொவரும் அடைந்து கொள்ள முடியாத, அதனை மற்றெவரும் முந்திச் செல்ல முடியாது, அதனை அடைந்து கொள்ளும் விடயத்தில் பேராசைக்காரர்கள் ஈடுபாடு கொள்ளவும் முடியாது. நெருக்கமான மலக்கு, நபி, ரசூல், உண்மையாளர், சாட்சியாளர், அறிஞர், அறிவிலி, கீழானவர், சிறப்புக்குரியவர், நல்ல விசுவாசி, கெட்ட நிராகரிப்பாளன், அடக்குமுறை ஆட்சியாளன், வழிகெடுக்கும்
ஷைத்தான் இவற்றுக்கிடையேயுள்ள ஏனைய படைப்பினங்கள் அனைத்தும் உங்களது யதார்த்தத்தின் மகிமையை, உங்களது செயலின் மகத்துவத்தை, உங்களது உள்ளகவின் பெருமிதத்தை, உங்களது ஒளியின் பூரணத்துவத்தை, உங்களது இருப்பின் உண்மையை, உங்களது சிறப்பின் நிரந்தரத்தை, அல்லாஹ்விடத்திலுள்ள உங்களது ஸ்தானத்தினதும் இடத்தினதும் மாண்பை, அவன் மீதான உங்களது விசேடத்துவத்தை, அவனளவிலான உங்களது நெருக்கத்தை அறியாமல் இருக்க முடியாது.
'எனவே தாய் எனது தந்தை, எனது குடும்பம், எனது செல்வம், எனது உறவினர்கள் அனைவரும் தங்களுக்கு சமர்ப்பணம். ஆல்லாஹ்விடத்தில் நான் சாட்சி கூறுகின்றேன், உங்களிடமும் சாட்சி கூறுகின்றேன், நிச்சயமாக நான் உங்களையும். காபிர்கள் தமது பகைமையின் காரணமாக அச்சமற்றிருக்கும் மறுமையையும், பாவிகள் தமது பாவத்தின் காரணமாகவும் உங்களுக்கு முரண்பட்டோரின் வழிகேடு காரணமாகவும் நிராகரித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய கோட்பாடு அம்சங்களையும் விசுவாசம் கொண்ட முஃமினாபவும், உங்களுக்கு உங்களது நேசர்களுக்கும் வழிப்படுபவனாகவும், உங்களது பகைவர்களை கோபம் கொண்டவனாகவும், உங்கள் மீது ஈர்ப்பு மிக்கவனாகவும், உங்களுடன் சமாதானம் செய்வோருடன் சமாதானம் செய்வோனாகவும், உங்களுடன் போர் புரிவோருடன் போர் புரிவோனாகவும், நீங்கள் உண்மைப்படுத்துபவற்றை உண்மைப்படுத்துபவனாகவும், நீங்கள் தவிர்ப்பவற்றைத் தவிர்ப்பவனாகவும், உங்களுக்கு அடிபணிபவனாகவும், உங்களது உரிமைகளை அறிந்தவனாகவுலும், உங்களது சிறப்புகளை நிலைப்படுத்தக்கூடியவனாகவும், உங்களது அறிவைத் தேடிப் பெறக்கூடியவனாகவும், உங்களது இருப்பைப் பாதுகாப்பவனாகவும், உங்களை அதிகம் பயன்படுத்தக் கூடியவனாகவும், உங்களது பரிசுத்த நிலையை நம்பிக்கை கொண்டவனாகவும், உங்களது மார்க்க சட்டவாக்க உயர்நிலையை உண்மைப்படுத்துபவனாகவும், உங்களது ஏவல்களை எதிர்பார்ப்பவனாகவும், உங்களது நேசத்தை நெருக்கம் கொண்டவனாகவும், உங்களது சொற்களை ஏற்று நடப்பவனாகவும், உங்களது கட்டளைகளை அமுல்படுத்துபவனாகவும், உங்களிடம் உதவி தேடுபவனாகவும், உங்களைத் தரிசிப்பவனாகவும், உங்களது மண்ணறைகளிடம் மீளக்கூடியவனாகவும், உங்களின் மூலம் அல்லாஹ்விடம் பரிந்துரை தேடுவோனாகவும், உங்களின் மூலம்.
இறைநெருக்கத்தைப் பெறமுனைவோனாகவும், எனது தேவைகள், விடயங்கள் அனைத்தின் போதும் எனது தேவைகளை விருப்பங்களை வேண்டுகோள்களை விட உங்களை முன்னிலைப்படுத்தக்கூடியவனாகவும், உங்களது இரகசியங்களை பரகசியங்களை உங்களது வெளிப்படையை மறைமுகத்தை உங்களது ஆரம்பத்தை இறுதியை விசுவாசித்தவனாகவும், இவையனைத்திலும் உங்களின் பாலே முகம் நோகக்கூடியவனாகவும், உங்களுடன் இணைந்துள்ள முஸ்லிமாகவும் நான் இருக்கின்றேன். எனது உள்ளம் உங்களின் பால் திரும்பியுள்ளது, எனது சிந்தனை உங்களைப் பின்பற்றுகின்றது, அல்லாஹ் தனது மார்க்கத்தை உங்களின் மூலம் உயிர்ப்பிக்கச் செய்வதற்கும் மார்க்கப் பணிக்கென உங்களைப் பயன்படுத்துவதற்கும், அதன் நீதத்திற்கென உங்களை வெளியாக்குவதற்கும், இப்பூமியில் உங்களை சக்தி மிக்க சாத்தியவான்களாக மாற்றுவதற்குமாக எனது உதவி உங்களுக்கென தயார்படுத்தப்பட்டுள்ளது.
'உங்களையன்றி வேறெவருடனும் நானில்லை. உங்களை நம்பிக்கை கொண்டுள்ளேன். ஊங்களின் ஆரம்பமானவரை ஏற்றுக் கொண்டது போன்றே உங்களில் இறுதியானவரையும் ஏற்றுக் கொள்கின்றேன். உங்களது பகைவரிடமிருந்து, அழிவு, நாசம், ஷைத்தானியத் என்பவற்றிலிருந்தும், உங்களுக்கு அநீதியிழைத்த, உங்களது உரிமைகளை நிராகரித்த, உங்களது தலைமைத்துவத்தைப் புறக்கணித்த, உங்களது சொத்துகளைப் பிடுங்கிக் கொண்ட, உங்களைத் தவறானவர்களாக சித்தரித்த கூட்டத்திலிருந்தும், உங்களைப்புறக்கணிக்கும் நிகழ்ச்சிகள், உங்களைத் தவிர்ந்தவர்களுக்கான வழிபாடு என்பவற்றிலிருந்தும், நரகின் பக்கம் அழைப்பு விடுக்கும் சமூகத் தலைவர்களிலிருந்தும் நீங்கி, நான் அல்லாஹ்வின் பால் நெருங்கி விட்டேன். நூன் உயிரோடுள்ள வரை உங்களது தலைமைத்துவத்தின் கீழும், உங்களது நேசம், உங்களது மார்க்கம் என்பவற்றின் மீதும் அல்லாஹ் என்னை நிலைப்படுத்தி வைப்பானாக. உங்களுக்கு வழிப்படும் தௌபீக்கை தந்தருள்வானாக. ஊங்களது பிரிந்துரையை எனக்கு வழங்கியருள்வானாக. நீங்கள் அழைப்பு விடுத்த மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற உங்களது பிரதிநிதித்துவத்தின் நல்லடியார்களில் ஒருவனாக என்னை ஆக்கியருள்வானாக. ஊங்களது வரலாறுகளை பிறருக்கு எடுத்துரைக்கின்ற, உங்களது பாதையில் நடக்கின்ற, உங்களது நேர்வழியில் வாழுகின்ற மக்களில் ஒருவனாகவும், மறுமையில் உங்களது.
கூட்டத்தினரில் எழுப்பப்படக்கூடிய, உங்களது முன்றலில் பெயர் கூறப்படக்கூடிய, உங்களது உலகில் நிலைப்படுத்தக்கூடிய, உங்களது ஆரோக்கியத்தில் சிறப்பாக்கப்படக்கூடிய, உங்களது வாழ்நாளில் சாத்தியமாக்கப்படக்கூடிய, உங்களைப் பார்ப்பதன் மூலம் கண்குளிர்ச்சி பெறக்கூடிய மக்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கியருள்வானாக.
'எனது தந்தை, எனது தாய், எனது ஆன்மா, எனது குடும்பம், எனது செல்வம் அனைத்தும் தங்களுக்கு சமர்ப்பணமாகட்டும். ஏவர் அல்லாஹ்வை நாடுகின்றாரோ அவர் உங்களைக் கொண்டு ஆரம்பம் செய்வார். ஏவர் அவனை ஏகத்துவப்படுத்துகின்றாரோ அவர் உங்களை ஒப்புக் கொள்வார், எவர் அவனை விரும்புகின்றாரோ அவர் உங்களைக் கொண்டு தனது இரட்சகனை முன்னோக்குவார். ஊங்களது புகழ் மட்டிலடங்காதவை. உங்களது யதார்த்தத்தின் பிரகாரம் உங்களைப் புகழ்வதற்கும் உங்களது சிறப்புகளை வர்ணிப்பதற்கும் வார்த்தைகளால் முடிவதில்லை. நீங்கள் நன்மைகளின் ஒளியாகவும், நல்லடியார்களின் நேர்வழியாகவும், அடக்கியாளும் அல்லாஹ்வின் அத்தாட்சியாகவும் இருக்கின்றீர்கள். உங்களைக் கொண்டெ அல்லாஹ் ஆரம்பம் செய்தான். ஊங்களைக் கொண்டே அல்லாஹ் நிறைவும் செய்வான், உங்களின் பொருட்டே மழையைப் பொழிவிக்கின்றான், உங்களின் பொருட்டெ தனது ஆனுமதியின்றி விழுந்து விடாமல் வானத்தை கட்டுப்படுத்திக் கொள்கின்றான். உங்களின் பொருட்டே கவலைகளையும் உணரச் செய்கின்றான், கஷ்டங்களை வெளிப்படுத்துகின்றான். அவனது தூதர்கள் கொண்டு வந்தவை உங்களிடத்தேயுள்ளன. அவனது மலக்குகள் அவற்றைக் கொண்டு இறங்கினர். ஊங்களது பாட்டனார் வரைக்கும் ரூஹுல் அமீன் அனுப்பப்பட்டார். அல்லாஹ், உலகத்தார் எவருக்கும் வழங்காத சிறப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளான். ஒவ்வொரு சிறப்பும் உங்களது சிறப்புக்கு முன்னால் சிறுமையடைகின்றன, ஒவ்வொரு பெருமையாளனும் உங்களுக்கு வழிப்படுவதன் மூலம் தாழ்மை பெறுகின்றனர். ஓவ்வொரு அடக்குமுறையாளர்களுக்கும் உங்களது மகிமைக்கு தலைசாய்க்கின்றனர். உங்களுக்கு எதிரான அனைத்தும் இழிவானவையாகும். ஊங்களது ஒளியினால் பூமி பிரகாசம் பெறுகின்றது. உங்களது பிரதிநிதித்துவத்தினால் வெற்றியாளர்கள் வெற்றியடைகின்றார்கள் உங்களைக் கொண்டே இறை பொருத்தம் யாசிக்கப்படுகின்றது. உங்களது விலாயத்தை நிராகரித்தவன் மீது ரஹ்மானின் கோபம் உண்டாகிவிடுகின்றது.
'எனது தந்தை எனது தாய், எனது ஆன்மா, எனது குடும்பம் எனது செல்வம் அனைத்தும் தங்களுக்கு சமர்ப்பணமாகட்டும். ஊங்களது நாமங்களை விட சுவையானதோ, உங்களது ஆன்மாவை விட சங்கையானதோ, உங்களது யதார்த்தத்தை விட மகத்துவமானதோ, உங்களது ஆளுமையை விட மிகையானதோ, உங்களது உடன்படிக்கையின் நம்பகத்தன்மையை விட உயர்வானதோ, உங்களது வாக்குறுதியை விட உண்மையானதோ வேறெதுவுமில்லை. உங்களது பேச்சு ஒளியாகும், உங்களது ஏவல் வழிகாட்டியாகும், உங்களது உபதேசம் இறையச்சமும், உங்களது செயல் நன்மையாகும், உங்களது நடைமுறை அழகாகும், உங்களது தானம் கொடையாகும். ஊங்களது விடயம் சத்தியமும் உண்மையும் மென்மையுமாகும், உங்களது சொல் ஞானமும் இன்றியமையாததாகும். உங்களது அபிப்பிராயம் அறிவும் அன்பும் உறுதியுமாகும். நன்மையான விடயம் நினைவுகூறப்பட்டால் அதில் முதலாவதாகவும் அதன் அடிப்படையாகவும் அதன் பகுதியாகவும் பொக்கிஷமாகவும் அதன் தங்குமிடமாகவும் அதன் முடிவுத்தளமாகவும் நீங்கள் இருப்பீர்கள்.
'எனது தந்தையும் எனது தாயும் எனது ஆன்மாவும் தங்களுக்கு சமர்ப்பணமாகட்டும். ஊங்களது புகழின் அழகை எவ்வாறு வர்ணிப்பேன், உங்களது சோதனைகளின் நிறைவை எஞ்ஙனம் மட்டிடுவேன், உங்களைக் கொண்டே அல்லாஹ் அழிவிலிருந்து எம்மை வெளியாக்கினான். உங்களைக் கொண்டே கஷ்டங்களின் கொடும்பிடியிலிருந்து எம்மைத் தனிமைப்படுத்தினான், பேரழிவின் விளிம்பிலிருந்தும் நரகிலிருந்தும் எம்மைக் காப்பாறங்றினான். எனது தந்தையும் எனது தாயும் எனது ஆன்மாவும் தங்களுக்கு சமர்ப்பணமாகட்டும். ஊங்களது தலைமைத்தவத்தைக் கொண்டே அல்லாஹ் எங்களது மார்க்க அறிவை எங்களுக்குக் கற்றுத் தந்தான், எங்களது துன்யாவிலிருந்த குழப்பங்களை சீர்திருத்தினான். ஊங்களது தலைமைத்துவத்தைக் கொண்டே இறை கலிமா பூரணத்துவம் பெற்றது, அருட்கொடைகள் மகத்துவம் பெற்றன, சமூகம் சீர்மைக்குள்ளானது. உங்களது தலைமைத்துவத்தைக் கொண்டே கடமையான வழிபாடு ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. உங்களை அன்பு கொள்வது கடமையாக இருக்கின்றது. உங்களுக்கு உயர்ந்த அந்தஸ்தும், புகழுக்குரிய இடமும், அல்லாஹ்விடத்தில் அறியப்பட்ட ஸ்தலமும், மாபெரும்
தலைமைத்துவமும், பெரும் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய பரிந்துரையும் இருக்கின்றன. எங்கள் இரட்சகனே! நீ இறக்கியவற்றை நாங்கள் ஈமான் கொண்டொம். இறைத்தூதரைப் பின்பற்றினோம், எங்களை இதன் மீதான சாட்சியாளர்களாக பதிவு செய்வாயாக. ஏங்கள் இரட்சகனே! நாங்கள் நேர்வழி பெற்ற பின்னர் எங்கள் உள்ளம் பிறழச் செய்து விடாதே உன் புறத்திலிருந்து எமக்கு அருளை வழங்குவாயாக. நிச்சயமாக நீ இரக்கமுள்ளவனாக இருக்கின்றாய். எங்களது இரட்சகனுடைய வாக்குறுதி நிறைவேற்றப்படக்கூடியதாகும். ஆத்தகைய எங்கள் இரட்சகளை நான் துதி செய்கின்றேன்
'அல்லாஹ்வின் நேசரே! நிச்சயமாக எனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் எனது பாவங்கள் திரையாக இருக்கின்றன. உங்களது திருப்பொருத்தத்தினாலேயேயன்றி அவை மன்னிக்கப்பட்மாட்டாது. தனது இரகசியத்தின் மீது நிலையாக உள்ள, தனது படைப்பினங்களுடைய விடயத்தை கண்காணிக்க்கூடிய, தனக்கான வழிபாட்டை உங்களுக்கு வழிப்படுதலாக ஆக்கிய அந்த அல்லாஹ்வின் பொருட்டினால், நீங்கள் எனது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பிரிந்துரை செய்யுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு வழிப்படுபவனாகும். எவன் உங்களுக்கு வழிப்படுகின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவனாவான், எவன் உங்களுக்கு மாறு செய்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவனாவான், எவன் உங்களை நேசிக்கின்றானோ அவன் அல்லாஹ்வை நேசித்தவனாவான், எவன் உங்களை கோபிக்கின்றானோ அவன் அல்லாஹ்வை கோபித்தவனாவான்.
'யாஅல்லாஹ்! உனது பரிசுத்த தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களையும், சிறந்தவர்களும் நல்லடியார்களுமான அவர்களது தூய அஹ்லுல்பைத்தினரையும் உனக்கு நெருக்கமான எனது பரிந்துரையாளர்களாக அவர்களை நீ ஆக்கி வைப்பாயாக. அவர்களுக்காக என் மீது நீ கடமையாக்கியுள்ள அவர்களது உரிமையின் பொருட்டினால், அவர்களை நன்கு அறிந்த கூட்டத்தில் என்னைச் சேர்க்குமாறும், அவர்களின் பொருட்டினால் அவர்களது பிரிந்துரை அவசியமானவர்களின் கூட்டத்தில் என்னை சேர்க்குமாறும் நான் கேட்கிNறேன். நிச்சயமாக நீ அருளாளர்களிலெல்லாம் மிகச்சிறந்த அருளாளனாக இருக்கின்றாய்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது தூய குடும்பத்தினர் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லியருள்வானாக. ஆல்லாஹ் எமக்குப் போதுமானவன், அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்'

கருத்துகள் இல்லை: